Monday, April 28, 2008

மேடைப் பேச்சு

நீண்ட நாட்களுக்கு முன், "நீங்களும் மேடைப் பேச்சாளர் ஆகலாம்" என்ற புத்தகம் படித்தேன். அதில் எழுதப்பட்டிருந்த ஒரு விஷயம் மிகவும் பிடித்திருந்தது. அதாவது, ஒரு மேடையில் பேசும் போது அந்த அரங்கத்தைப் பற்றியோ, அதற்கு முன் நடந்த சில நிகழ்வுகளைப் பற்றியோ பேசி ஆரம்பித்தால் அந்த விழாவுடன் ஒன்றி போன ஒரு உணர்வு கிடைக்கும் என்று எழுதி இருந்தது. நான் கவனித்த/கேள்விப்பட்ட சில மேடைப் பேச்சுகளில் இந்த விஷயம் எந்த அளவுக்கு ஒற்றுப் போய் இருக்கிறது என்பதைப் பற்றி கூற விரும்புகிறேன்.

பேரறிஞர் அண்ணா அவர்கள், சித்திரை மாதத்தில் இரவு 10.30 மணிக்கு தேர்தல் பிரச்சாரம் செய்ய சென்றிருக்கிறார். அப்போது திரளான மக்கள் கூட்டம், அண்ணாவின் பேச்சைக் கேட்க ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள். நேர தாமதம் ஆகிவிட்ட சூழ் நிலையில், மிகவும் சுருக்கமாக பேச வேண்டும். அதே நேரத்தில் மக்கள் ரசிக்கும்படியாகவும் பேச வேண்டும். அண்ணா அவர்கள் பேசியது நான்கே வரிகள் தான். அவை

"மாதமோ சித்திரை
மணியோ பத்த்ரை(10.30)
உங்களுக்கோ நித்திரை
மறவாமல் உதயசூரியனுக்கே உங்கள் முத்திரை"

எவ்வளவு சுருக்குமாகவும் எவ்வளவு நிறைவாகவும் பேசி இருக்கிறார்.

வைரமுத்து அவர்கள் என் கல்லூரிக்கு வந்து இருந்த பொழுது அவரின் ஆரம்பப் பேச்சும், அவர் பேச ஆரம்பிக்கும் முன் நடந்த நிகழ்வுகளை எவ்வாறு பிரதிபலித்தன என்பதைப் பற்றிப் பார்ப்போம். நான் படித்தது ஒரு இசுலாமியக் கல்லூரி. பொதுவாக, இசுலாமிய இறை வாழ்த்து படிக்க பெறும் பொழுது அமைதியாக இருப்போமே தவிர எழுந்து நிற்பது வழக்கம் அல்ல.ஆனால், தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும் பொழுது எழுந்து நிற்பது நாம் அனைவரும் கடைபிடிப்பது தான்.

இதை கவனித்த வைரமுத்து அவர்கள்,
"இங்கே முதலில் இறை வாழ்த்து பாடப்பட்டது. யாரும் எழு ந்து நிற்க வில்லை. பின்னர், தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது...." என்று சொல்லி முடிக்கக் கூடவில்லை. கைத்தட்டல்கள் மீதமுள்ள வார்த்தைகளை பூர்த்தி செய்தன.

எங்கள் கல்லூரி அரங்கில் பொதுவாக ஆண்கள் வலது பக்கமும் பெண்கள் இடது புறமும் உட்கார வேண்டும் என்பது விதிமுறை.

இதை கவனித்த வைரமுத்து அவர்கள், ஆண்களை நோக்கி சொன்னார்.. "உங்கள் அரங் கமும் உங்களைப் போலத் தான். நீங்களும்(ஆண்களை சுட்டி காட்டி) இவர்களை(பெண்களை காட்டி) உங்களின் இடது புறம் தான் வைத்து இருக்கிறீர்கள்.. (இதயம் இடது புறம் தானே இருக்கிறது :) ).. உங்கள் அரங்கமும் இவர்களை இடது புறம் தான் வைத்து இருக்கிறது" என்றார்... கைத்தட்டல்களைப் பற்றி நான் சொல்ல வேண்டியதில்லை :)

ஒரு முறை, வைரமுத்து அவர்கள் ஒரு கல்லூரிக்கு சென்று இருந்தார். அந்த கல்லூரியின் நிர்வாகி ஒருவர் , வைரமுத்து அவர்கள் பேசுவதற்கு முன், "இங்கே சிறப்பு விரு ந்தினராக வ ந்து இருக்கும் வைரமுத்து அவர்கள் மிகவும் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரியவர்.. தயவு செய்து இவர் பேசும் போது விசில் அடிப்பது போன்ற செயல்களை செய்து கல்லூரிக்கு அவப்பெயர் ஏற்படுத்தாத வண்ணம் நடந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்" என்று தன்து பேச்சை முடித்தார்.

அடுத்ததாக பேச வைரமுத்து அவர்கள் வந்த பொழுது.. "குயில்களுக்கு அழகே கூவுவது தான். அவைகளை கூவ வேண்டாம் என்று சொன்னால் எப்படி?.. எங்கே குயில்களே .. கொஞ்சம் கூவுங்கள் பார்ப்போம்" என்றார். விசில் சத்தம் விண்ணைக் கிழிக்கும் அளவுக்கு இருந்ததாம்.


இதே போல்,கலைஞர் அவர்கள், சமீபத்திய 2007-ம் ஆண்டு சட்டசபை பிரசாரத்தின் போது வேலூர் கோட்டையில் பேசும் போது கால தாமதம் காரணமாக சீக்கிரம் பேசி முடிக்க வேண்டிய நிலையில் ஒரே ஒரு வரியில் பேசி முடித்தார் " இன்று மே 2-ம் தேதி.. வேலூர் கோட்டையில் இருக்கிறோம்.. மே 8-ம் தேதி சென்னை கோட்டையில் ஆட்சி பொறுப்புடன் ச ந்திப்போம்" என்று.
Whats Your Google PageRank?

Monday, April 21, 2008

என் கல்லூரி விழாவில் கவிப்பேரரசு வைரமுத்து


கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் நான் படித்த கல்லூரி தமிழ் மன்ற விழாவின் சிறப்பு விருந்தினராக வந்திருந்தார். முதல் முறை இது போன்று ஒரு பேச்சை கவனிக்கப் போறோம்-ங்கிற feeling கூட இல்லை. சும்மா நானும் இருக்கேன் பேர்விழி-நு உட்கார்ந்து கிட்டு இருந்தேன்.அவர் பேச ஆரம்பிச்ச கொஞ்சம் நேரத்துல எல்லாம் ஒரு magnet மாதிரி இழுக்க ஆரம்பிச்சது அவரோட பேச்சு.

அவர் அப்போ பேசினதுல இருந்து சில snippets:

ஓரு situation அல்லது ஒரு குறிப்புக்கு ஏத்த வகையில் ஒரெ வரியில கவிதை சொல்லணும்.

விலை மாது: இங்கு மட்டுமே இவள் தனிமையில்.
அரசியல்வாதி : கை தட்டி விடாதீர்கள்.எழுந்து பேச ஆரம்பித்து விடுவான்.
நடிகை : திறந்து பார்த்து விடாதீர்கள். மேக்கப் இல்லாமல் அசிங்கமாய் இருப்பாள்.
குடிகாரன் : தண்ணீரில் மிதந்தவன் தரையில் இன்று.

தமிழை தேசிய மொழியாக ஆக்க வேண்டும் என்று அண்ணா அவர்கள் டில்லி சென்று இரு ந்தாராம். அப்போது அங்கே இருந்த பத்திரிக்கை நிருபர்கள் சிலர், அண்ணாவை கேட்டனராம் "ஐயா இது ஒரு ஜனநாயக நாடு. இங்கே எந்த ஒரு செயலும் எண்ணிக்கையின் அடிப்படையில் தான் அமைய வேண்டும். அப்படி பார்க்கும் போது, இங்கே தமிழ் பேசும் மக்களை விட ஹிந்தி பேசும் மக்கள் தான் அதிகம். அப்படி இருக்கும் பொழுது நீங்கள் எவ்வாறு தமிழை தேசிய மொழியாய் அறிவிக்க நினைக்கிறீர்கள்?" என்று.

அதற்கு பேரறிஞர் அண்ணா சொன்னாராம் " நீங்கள் சொல்வது சரிதான். ஒப்புக் கொள்கிறேன். அப்படிப் பார்த்தால் இந்தியாவில் மயில்களின் எண்ணிக்கையை விட காகங்களின் எண்ணிக்கை தான் அதிகம். அதை அடிப்படையாய்க் கொண்டு காகத்தை தேசியப் பறவையாய் அறிவிக்க முடியுமா?" என்று.

திகைத்துப் போய் நின்றனராம் பத்திரிக்கையாளர்கள்.

ஒரு முறை சர்தார் வல்லபாய் பட்டேல் வெளிநாடு சென்று இருந்த போது ஒரு பத்திரிக்கையாளர் கேட்டாராம் "What is your culture" என்று.
அதற்கு அவர் பதில் அளித்தாராம் "Our culture is agriculture" என்று.
ஒரு நாட்டின் கலாசாரம் அதன் தொழில் உடன் ஒன்று பட்டிருக்கும் அழகைத் தான் அவர் அவ்வாறாக கூறியுள்ளார்.

மாவீரன் நெப்போலியன் தன் கடைசி காலத்தில் தன்னுடைய தளபதியை அழைத்து " நான் மரணம் அடைந்தால் என் சவப்பெட்டியை மூடும் பொழுது என் இரு கைகளையும் வெளியே வைத்து சவப்பெட்டியை மூடுங்கள். அப்படியாவது இந்த உலகம் அறியட்டும் .. உலகையே ஆட்சி செய்த நெப்போலியன் கூட இந்த பூமியை விட்டுச் செல்லும் பொழுது ஒன்றையும் அவன் கையில் எடுத்துச் செல்லவில்லை" என்று.

வைரமுத்து அவர்களிடம் ஒரு முறை ஒரு கிராமத்தை சேர்ந்த ஒரு இளைஞன் அவனது கவிதைத் தொகுப்புகளைக் கொண்டு வந்தானாம். வைரமுத்து அவர்கள், அதை ஏனோ தானோ என்று அதை ஒரு ஈடுபாடு இல்லாமல் புரட்டிப் பார்த்துக் கொண்டு இருந்தாராம். திடீரென்று அவர் கண்ணில, அதில் எழுதி இருந்த ஒரு கவிதை கண்ணில் பட்டதாம் "மகாத்மா சொன்னது சரிதான். கிராமப் புறங்கள் இந்தியாவின் முதுகு எலும்புகள் தான்.. அதனால் தான் யாரும் அதைத் திரும்பிக் கூடப் பார்ப்பதில்லை" என்ற ஒரு கவிதை. உடனே தன் உதவியாளர்களை அழைத்து அந்த இளைஞனின் கவிதைகளைப் ப்ரிண்ட் செய்வதற்கு தேவையானவற்றை செய்யுமாறு கேட்டுக் கொண்டாராம்.

இன்னும் நிறைய பேசினார். ஆனா அத்தனையும் ஞாபகம் இல்லை :).
அவர் பேசிக்கொண்டு இருக்கும் போது "ஐயய்யோ .. இப்போ முடிச்சிடுவாரோ...இப்போ முடிச்சிடுவாரோ..." நு ஒரு feeling இருந்து கிட்டே இருந்துச்சு. அவர் பேசும் பொழுது pin drop silence என்கிற அளவுக்கு நிசப்தம்.. அவ்வளவு வசீகரம் அந்த பேச்சுல..

நூறு புத்தகங்களை படிக்கிறதும் ஒன்னு தான். இந்த மாதிரி கற்று அறிந்த அறிஞர்களின் பேச்சைக் கேக்குறதும் ஒன்னு தான்.
வாழ்க கவிப்பேரரசு!

விமர்சனங்களைப் பற்றி கவிப்பேரரசு வைரமுத்துவின் கருத்து


How do you handle someone's opinion about you. You would have heard "n" number of proverbs, quotes,sayings etc.etc., but, with the richness of tamil language and with his elegant and simplistic style of writing, What this "Samrat" of tamil poets says about it is written below. This poem is cited from his book "தமிழுக்கு நிறம் உண்டு". I dont remember the exact lines. I dont have that book with me right now. But, I have somehow managed to requote it in the best possible manner.
நீ எதை செய்தாலும் இந்த உலகம் உன்னை எதாவது சொல்லி கொண்டே தான் இருக்கும்.
எல்லோர் வாயிலும் ஒற்றை நாக்கு.
உலகத்தின் வாயில் ரெட்டை நாக்கு.

எளிதாய் நானும் ஆடைகள் அணிந்தேன்.
வடுகப்பட்டி வழியுது என்றது.
அழகாய் நானும் சில ஆடைகள் அணிந்தேன்.
கழுதைக்கு எதற்கு கண்மை என்றது

சொந்த ஊரில் துளி நிலம் இல்லை
இவனா மண்ணின் மைந்தன் என்றது
தென்னை மரங்கள் சிலவும் வாங்கினேன்.
பண்ணையார் ஆனான் பாவலன் என்றது.

தேசிய விருதுகள் சிலவும் பெற்றேன்.
குருட்டு அதிர்ஷ்டம் கதவைத் தட்டுது என்றது
மீண்டும் விருதுகள் சில பெற்றேன்.
டெல்லியில் யாரையோ தெரியும் என்றது

பெண்களிடம் சற்று விலகி நின்றேன்.
புலவன் என்ற ஆணவம் என்றது
கண்களை நேராய் பார்த்து பேசினேன்.
புலவனின் கண்களை கவனி "காமம்" என்றது

இப்படி நீ எதை செய்தாலும் இந்த உலகம் உன்னை எதாவது சொல்லிக் கொண்டே தான் இருக்கும்.
இதற்கு இரண்டே வழிகள் தான் உள்ளன.

ஓன்று, உலகத்தின் வாயைத் தைத்திடு.
அல்லது, உன் செவிகளை மூடிடு.

உலகின் வாயைத் தைப்பது கடினம்.
உந்தன் செவிகளை மூடுதல் சுலபம்.

- கவிப்பேரரசு


இதே மாதிரி,முதல் மரியாதை படத்துல ஒரு சீன், சிவாஜிக்கும் ராதாவுக்கும் இருக்கிற உறவைப் பத்தி ஊர்ல எல்லாரும் தப்பா பேசுற மாதிரி ஒரு காட்சி.. அப்போ தான் "ராசாவே உன்னை நம்பி" அப்டிங்கிற பாட்டு வரும். அதுல ஒரு வரி..

"கலங்கம் வந்தால் என்ன பாரு,
அதுக்கும் நிலான்னு தான் பேரு"
ன்னு கவிப்பேரரசு எழுதி இருப்பார்.

அடுத்த முறை , உங்களை யாரேனும் விமர்சனம் செய்தால், அவர்களின் விமர்சனம் உங்களை பாதிக்காத வகையில் இந்த கவிதைகள் உங்கள் மனதை பண்படுத்தும் என்று நம்புகிறேன்.

மன்னிக்கவும். இந்த கவிதையை முழுமையாய் வழங்க முடியவில்லை என்பதற்கு வருத்தம் தெரிவிக்கிறேன்.

அதே சமயம், இந்த கவிதை உங்கள் மனதில் ஒரு சின்ன நல்லுணர்வை ஏற்படுத்தி இரு ந்தால் அதற்கு மகிழ்ச்சி தெரிவித்து கொள்கிறேன்.Whats Your Google PageRank?

Wednesday, April 16, 2008

சொல்லாததும் உண்மை - பிரகாஷ் ராஜ்


Here, I have Ctrl-C-ed and Ctrl-V-ed some of the excellent lines from the book சொல்லாததும் உண்மை by பிரகாஷ் ராஜ் . I am really dumbfounded by the way he thinks. The way he looks at things is really cool and different. Here are some of them.

1.ஒரு பிணம் என்னை கட ந்து போகுது. பாடையில படுத்து இருக்கிறவன் " வாடா மாப்ள வ ந்து ஆடுறியா? அப்பத்தானே உன் சாவுக்கு என் பேரன் வ ந்து ஆடுவான்" - அப்டினு கூப்பிடுர மாதிரி இருக்கு.

2.மரங்கள் மனிதனை கேட்டனவாம் " நாங்கள் 2000 ஆண்டுகளாக எத்தனை லட்சம் சிலுவைகளைத் த ந்து இருக்கிறோம். ஆனால், உங்களால் ஏன் ஒரு ஏசு கிறிச்துவைக்கூட தர முடியவில்லை" என்று

3.காதல் வெளிச்சத்திலயும் காமம் இருட்டிலயும் இருக்கிறது தான் வாழ்க்கையோட அழகு

4.வாய்ப்பு கிடைக்காததுனாலே தானே நாட்டில இன்னும் நெறைய பேரு நல்லவனா சுத்தி கிட்டு இருக்கானுங்க?

5. "ப்ரியம்" படம் ரிலீச் ஆன நேரம். poster-ல என் photo கொஞ்சம் பெருசா வந்த நேரம் அது. " நமக்கும் face value வந்துடுச்சு"நு மனசுக்கு உள்ள ஒரு கர்வம் லேசா எட்டி பார்த்துச்சு. திடீர்னு ஒருத்தன் posterல இருந்த என் photo மேல ரொம்ப சுதந்திரமா அவனோட அவசரத்தை இறக்கி கிட்டு இருந்தான். என் assistants எல்லாம் கோபம் ஆகி காரை விட்டு இறங்க பார்த்தாங்க. "அவனோட அவசரத்துல கூட எனக்கு பாடம் சொல்லி தர்ரான் டா. அ ந்த poster-ல வேற ஒருத்தனுடய photo இருந்து இருந்தா நீயும் நானும் சிரிச்சிட்டு தானே போய் இருப்போம்." - நு சொன்னேன்.


6. நான் திமிரோட தான் இருக்கேன். ஆனா ஒரு வித்தியாசம் என்னனா திமிர் என் ஆயுதம் இல்ல. அது என் கேடயம்

7.பூனை குறுக்கே போனா அபச குணம்னு ஒருத்தன் நினைச்சான்னா அது அவனுடைய தனிப்பட்ட விருப்பம், நம்பிக்கைனு விட்டுடுவேன். ஆனா, அம்மா விதவைங்கிரதால விசேஷங்கள் ஒதுக்கி வச்சா "அது அவனோட தனிப்பட்ட நம்பிக்கை"-னு என்னால விட முடியாது !

8.எவ்வளவு சிறந்த ஓட்டப்பந்தய வீரனாக இருந்தாலும் கால் தவறி விழுவது தவிரக்க முடியாதது. வெற்றியோ தோல்வியோ ஓர் இயக்கம் இருந்து கிட்டே இருக்கனும். நகருகிற அசைகிற எதைப் பார்த்தாலும் மனசுக்கு ஒரு புத்துணர்ச்சி கிடைக்கும். அதனால தான் குளத்தை விட நதிக்கு அதிகமான கவிதைகளும் கதைகளும் இருக்கு.

9.வெற்றிங்கிறது அரண்மனை மாதிரி. அங்கே பத்திரமா இருக்கலாம். ஆனா, எதையும் கத்துக்க முடியாது. அடர்ந்து விரிந்து இருக்கிற காட்டுல தான் அனுபவங்கள் பசுமையா பூத்திருக்கும.

10. நிகழ் காலத்த்தை தவற விடாத மன நிலை இருக்கிற எல்லருமே ஞானி தான்.

11."இந்திரா காந்தியை சுட்டு கொன்னுட்டாங்க.. பால் வராது பேப்பர் வராது "- நு மொழி படத்துல வர்ற ஒரு வசனத்தை கேட்டுட்டு கேன்ஸ் திரைப்பட விழாவில் ஒரு பெண்மனி "ஒரு தலைவர் இற ந்துட்டா பால் கூட வராத உங்க ஊர்ல"-நு என்னை கேட்டாங்க .. அதுக்கு நான் "நீங்க சில வினாடிகள் ஆச்சரியப் படுகிற விஷயம், எங்களுக்கு நூற்றாண்டு கால வாழ்க்கை" - நு பதில் சொன்னேன்.


இந்த புத்தகத்தை முழுமையாக படிக்க விரும்புகிறவர்கள், vivek16@gmail.com-ங்கிர mail id-ku மெயில் அனுப்பவும்.