மூங்கில் கம்புகள் துளையிடப்பட்டு, அழகாய் அது ஒரு ஓசை தருகையில் புல்லாங்குழல் ஆகிறது.
இந்த புல்லாங்குழல் வட இந்தியாவில் 'பன்சாரி' என் அழைக்கப்படுகிறது.
புல்லாங்குழல், கிருஷ்ண பகவானால் வாசிக்கப்பட்டதே அதன் முதல் சரித்திரக் கூறு.
புல்லாங்குழலுக்கும் மனிதனுக்கும் ஒரு அழகிய ஒற்றுமை உள்ளது.
புல்லாங்குழலுக்கும் 7 துளைகள். மனிதனின் உடலிலும் 7 துளைகள்.
நம் தமிழ் மொழி எனும் இசை அமைப்பாளரால் இந்த குழல் எவ்வளவு அழகாக வாசிக்கப் பட்டுள்ளது நினைத்தேன். அந்த சுவையை இங்கே பகிர்கிறேன்.
பெரும்பாலான பாடல்கள் கண்ணபிரானை நோக்கியே பாடப் பெற்று உள்ளன.
அவற்றுள் சில :
--------- ---
1. புல்லாங்குழல் குடுத்த மூங்கில்கலே எங்கள் புருஷோத்தமன் புகழ் பாடுங்களேன்.
2. அவன் வாய் குழலில் அழகாக, அமுதம் ததும்பும் இசையாக.
- பாடல் - காற்றில் வரும் கீதமே
படம் - ஒரு நாள் ஒரு கனவு
மற்ற உவமைகள்:
---- ------------
1. என் மூச்சில் வாழ்கின்ற புல்லாங்குழல்
பாடல்: கற்பூர் பொம்மை ஒன்று
படம்: கேளடி கணமணி
இந்த பாடலை ஒரு சிசுவை சுமக்கும் ஒரு கர்பிணிப் பெண் பாடுவதாக அமைக்கப்பட்ட பாடல் இது.
புல்லாங்குழலின் ஒரு துளை வழியே அனுப்பபடும் காற்றால், அது இயக்கப்படுகிறது.
கருவில் வளரும் ஒரு சிசுவும் அப்படித்தானே. சிசுவை குழலாய் உருவகப்படுத்தி, தாயின் சுவாசம், குழலை இயக்கும் காற்றாய், அந்த சிசுவை இயக்குகிறது, இயங்க வைக்கிறது!
2.ஊதாத புல்லங்குழல் ,எனது அழக சூடாத பூவின் மடல்.
பாடல் : அழகு மலர் ஆட, அபி நயங்கள் கூட
படம் : வைதேகி காத்திருந்தாள்
இந்த பாடல் ஒரு இளம் விதவை தன் விரக தாபத்தின் விளைவாய் பாடும் பாடல்.
இந்த பாடலில் "பூங்காற்று மெதுவாகப் பட்டாலும் போதும். என் மேனி நெருப்பாகக் கொதிக்கின்றது" என்றெல்லாம் அந்த பெண் பாடுவதாய் இந்த பாடலின் வரிகள் அமைக்கபெற்று இருக்கும். இங்கே, பெண் தன்னை குழலாய் உருவகம் செய்து கொண்டு, தான் வாசிக்கபடாமல் இருப்பதைத் தான் "ஊதாத புல்லாங்குழல்" என்று கூறுகிறாள்.
3. அந்த குழலைப் போல் அழுவதற்கு அத்தனை கண்கள் எனக்கு இல்லையே!
பாடல் : அலைபாயுதே
படம் : எவனோ ஒருவன் வாசிக்கிறான்
இந்த பாடல் முழுக்க முழுக்க குழலை மையமாகக் கொண்டு பாடப் பெற்ற பாடல்.
இந்த பாடலில் இருட்டில் இருந்து ஒருவன் புல்லாங்குழல் வாசிப்பது போலவும், அதை ரசித்து அந்த இசைக்கு மயங்கி நிற்கும் ஒரு பதுமை பாடுவது போல் அமைக்கப் பெற்றுள்ளது. கதா நாயகனை பிரிந்து இருக்கும் கதா நாயகி பாடும் பாடல் இது. இந்த பாடலில்
"புல்லாங்குழலே பூங்குழலே நீயும் நானும் ஒரு ஜாதி! உள்ளே இருக்கும் ஏக்கத்திலே உனக்கும் எனக்கும் சரி பாதி" என்று ஒரு வரி உள்ளது. அந்த பாடலில், புல்லாங்குழலில் ஒரு சோகமான ராகம் வாசிக்கப்படுவதாகவும், அந்த சோகத்தில் பாடும் பெண்ணுக்கும் குழலுக்கும் சரி பாதி சோகம் என்று கூறுகிறாள்.
சோக ராகம் வாசிப்பதற்கு புல்லாங்குழலுக்கு 7 கண்கள் உள்ளனவாம். இந்த பெண்ணுக்கு 2 கண்கள் தான் உள்ளனவாம். அதற்கு தான் "அந்த குழலைப் போல் அழுவதற்கு அத்தனை கண்கள் எனக்கு இல்லையே!" என்று பாடுகிறாள்.