Thursday, August 30, 2012

Ragging கொடுமைகள்

In the recent times, after reading about lot of anti-ragging committees, 24*7 helplines etc., etc., எங்க காலேஜ்-ல நடந்த சில கொடூர சம்பவங்கள்!  இந்த மாதிரி எல்லாம் பண்ணி அடுத்தவங்கள hurt பண்ண கூடாது -ங்கிற ஒரு social cause -க்காக இதை எழுதுறேன் ! As usual , யார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்தோடு கண்டிப்பா இல்ல!

Incident 1:

சீனியர் : டேய், இந்தா புடி Rs.20 , வெளிய போயி 2 Rs .10 நோட்டு வாங்கிட்டு வர்ற ! அதுவும் நூர் பாய் கடையில தான் வாங்கணும் ! வேற எங்கயாவது வாங்குனினா நான் easy -ஆ கண்டு பிடிச்சுடுவேன் !  இப்போ டைம் 8.15 pm , 9 மணிக்குள்ள என் கையில 2 Rs.10 நோட்டு இருக்கணும். ஓடு !

(Hostel  to மெயின் ரோடு , Up அண்ட் down  - 4 kms )

ஜூனியர் 1 to  ஜூனியர் 2 : எவ்ளோ கேவலமான ராக்கிங்  பாரு டா ! என்னை 4 kms நடக்க வைச்சி பாக்குறதுல இவனுக்கு என்ன sadistic pleasure நு புரியல! என் பாக்கெட் -லியே 2 Rs .10 நோட்டு இருக்கு! இதுக்கு  4 kms நடந்து போகணுமாம்! எப்புடி டா கண்டு புடிப்பான் ?

ஜூனியர் 2 to  ஜூனியர் 1 : அது தான் டா எனக்கும் புரியல ! சரி, அத விடு ! தனியா போகாதே ! நானும் கூட வர்றேன் ! (This is the best thing ever in hostel! You will always have an accomplice! )

ரெண்டு பேரும் வெளியே நடந்து போயி, 2 Rs .10 நோட்டு வாங்கிட்டு வந்தாச்சு!

ஷார்ப் 9.p.m-கு  Study hour ஆரம்பிக்கும். So , 8.50 is the safest time for any junior to enter a senior's room!

சீனியர் : எங்கே டா 2 Rs .10 நோட்டு ??

ஜூனியர் , பாக்கெட்ல இருந்து ரெண்டு நோட்டையும் எடுத்து நீட்டின உடனே , senior , அவன் தலையில கை  வச்சிகிட்டான் !

சீனியர் : டேய் , நாளைக்கு எனக்கு 2 lab  இருக்கு டா ! அதுக்கு நோட்டு(notebook)  வாங்கிட்டு வாடா -ன்னா , ரூபா நோட்டு வாங்கிட்டு வந்து இருக்க! இதுக்கு 4 kms வேற நடந்து போனியா டா ? டேய் , இப்போ நான் அத எழுதனுமே டா ! டேய் ராஜா , எனக்கு ஒரே ஒரு உண்மைய மட்டும் சொல்லிடு , உன்னைய விட்டுற்ரேன் ! நீ உண்மையிலேயே அப்டி தான் புரிஞ்சி கிட்டியா, இல்ல என்னை கலாய்க்கறதுக்காக இப்படி பண்ணியா

ஜூனியர் (Blushing about his intellectual interpretation ) : நான் உண்மையிலேயே அப்டி தான் சார் புரிஞ்சி கிட்டேன் !

சீனியர் : வீட்ல , உன் போட்டோ இருந்தா , உங்க அம்மாவை அந்த போட்டோவுக்காவது சுத்தி போட சொல்லு ! அவ்ளோ புத்திசாலி டா நீ !

Incident 2:

After all the enquiries about the family members, cut-off, dote/note questions, aatukkutty at home and all that, seniors relaxed and got well with the junior.

சீனியர் (Getting  into the  mood ): hmmm. "Matter" பத்தி எல்லாம்  தெரியுமா டா ??

ஜூனியர் (Blushing ) : கொஞ்சம் கொஞ்சம் தெரியும் சார் !

சீனியர் : உனக்கு என்ன தெரியும் நு சொல்லு பாப்போம் ??

ஜூனியர் : Matter -னா Solid, liquid, gas sir!

சீனியர் 1 to Senior 2 : மச்சான் , இவன் சத்தியமா உன்னை கலாய்க்குறான் ! புரிஞ்சிக்கோ !

Saturday, August 18, 2012

தெரியலியே மச்சி ! ஒரு quarter சொல்லேன் !

நான், அருண், யோகா - மூணு பேரும்  இணை பிரியா 'நண்பர்கள்'-ங்கிறது ஊருக்கே தெரிஞ்ச விஷயம் !



LKG  -ல இருந்தே எந்த நோட்டீஸ் board -லயும் எங்க பேரு இல்லாம இருக்காது! அவ்ளோ atrocity , அராஜகம், வன்முறை !

வீட்ல காரா சேவு, முறுக்கு நு எதை சாப்பிட்டாலும் "Cheers" அப்டின்னு  சொல்லிட்டு  அதை தட்டி சாப்பிடற  பழக்கம் ! வீட்ல பெரியவங்க இருந்தா கூட கண்டுக்காம விட்டுட்டாங்க!

இன்னொரு முரட்டு தனமான பழக்கம் என்னனா .. pls dont mistake us on this. although, i feel puppy shame, இந்த story -கு தேவைபடுது -ங்கிறதால சொல்ல வேண்டிய கட்டாயம்! அவன் அவன் ஸ்டோரி-கு தேவை படுது நு என்ன என்னவோ சொல்றான்  , கண்ட  சீன் எல்லாம் வைக்குறான் ! இதை சொல்றதுக்கு எனக்கு என்ன வெக்கம்! ok. let me open up! நீங்க  embarrassing-ஆ feel பண்ணினா அதுக்கு கம்பெனி பொறுப்பு ஆகாது!  அது என்னன்னா - யாரும் வீட்ல இல்லனா ,........................ இந்த Milk Bikis பிஸ்கட் இருக்கு இல்ல? அத வாங்கி  தண்ணியில முக்கி முக்கி சாப்பிடற  பழக்கம் ! இது சின்ன வயசுல இருந்து last week வரைக்கும் continue ஆகி கிட்டு இருக்கு ! இந்த பழக்கம் ராஜ ராஜ சோழனுக்கு அப்புறம் எங்களுக்கு தான் இருக்குனு அப்டின்னு recent-a தெரிய வந்தது!

2007-ல நாங்க மூணு பேரும் பெங்களூர் -ல இருந்து சென்னை வந்து கிட்டு இருந்தோம்!

ஆருயிர் தோழன் அருண் ,"நண்பா! சம்பவம் பண்ணி ரொம்ப நாள் ஆகுது இல்ல?" - அப்டின்னு ஒரு ஏக்கத்தோட  கர்ஜிச்சான் !

"வீட்டுக்கு போன உடனே பண்ணிருவோம்!" அப்டின்னு யோகா சொன்னான்!

முன்னாடி  சீட் -ல உட்கார்ந்து கிட்டு இருந்த aunty எங்களை திரும்பி முறைத்து பார்த்தாங்க! நாங்க எதுவுமே தெரியாத மாதிரி அமைதியா இருந்தோம்!

வழியில பஸ் ஒரு இடத்துல நின்னுச்சு!

யோகா to  அருண் : "விவேக் -ஐ  item வாங்கிட்டு வர சொல்லவா?" ( எவ்ளோ உரிமை பார்த்தீங்களா  மக்களே! எந்த ஜென்மத்திலும் இவனுங்க சல்லி பைசாக்கு எதையும் வாங்க மாட்டனுங்க !)

அருண் : இடது கையில காவலன்  தண்ணி குடுத்தான் நு அதை வாங்கி குடிக்காம செத்து போனாரு  பாரு ஒரு ராஜா , அவரும்  நாங்களும் ஒரே ரத்தம் ! தண்ணி இல்லாம சாப்பிட முடியாது!

(Again the aunty in the front row, last line-அ("தண்ணி இல்லாம சாப்பிட முடியாது! ")  மட்டும் கேட்டுட்டு திரும்ப முறைத்து விட்டு "சே" அப்டின்னு சொல்லிட்டு திரும்பிட்டாங்க!

நான் உடனே பஸ்-அ விட்டு இறங்கினேன் !

Me டு கடைக்காரர் : அண்ணா , Milk Bikis 10 - ரூபா பக்கெட் ஒன்னு , 1 வாட்டர் பக்கெட் , 1 dispensable cup.

இந்த combination -அ பார்த்த மத்தவங்களோட reaction எனக்கு புரியல. பிஸ்கட்-அ packet -ல போட்டு கிட்டு , ஒரு கையில water packet , ஒரு கையில dispensable கப் -ஓட பஸ்-ல ஏறுகிறேன் ! மொத்த bus -உம் என்னையே முறைச்சி  பார்க்குது !

இதுல  ஒரு மாமா டு மாமி  - "இதுங்க தொல்ல நாட்ல தாங்கல" ஒரு dialogue, எச்சில முழுங்கி கிட்டே!

Conductor seat -கு பக்கத்தில உட்கார்ந்து  கிட்டு இருந்த ஒரு அய்யா " பஸ்-ல சாப்டாங்க -னா இறக்கி விட்ருங்க சார்"-நு ஒரு advice வேற !


என் கையில வாட்டர் பாக்கெட்  + dispensable  cup -அ பார்த்த உடனே நண்பர்களுக்கு மிக்க மகிழ்ச்சி! - "ஒளி வந்து விட்டது"- நு ஒரு tinch dialogue  வேற !

அருண் : சீக்கிரம்  Open பண்ணு நண்பா !

யோகா : முதல்-ல தண்ணிய cup -ல ஊத்து டா !

இந்த டயலாக் எல்லாம் மொத்த  bus -உம் உன்னிப்பா கவனிச்சி கிட்டு இருக்கு ! இதுல நாலு அஞ்சி பேரு வச்ச கண் வாங்காம எங்களையே  பார்க்குறாங்க ! "நாங்க என்னடா மூலிகை பெட்ரோல் -ஆ செய்யுறோம் "- நு நெனைச்சி கிட்டு
நாங்க "கருமமே கண்ணா " இருந்தோம் !

conductor எழுந்து எங்க கிட்ட வர ஆரம்பிச்சார் !

அருண் : சீக்கிரம்  packet -ல இருந்து எடுத்து open பண்றா !

ஒரு சூப்பர் figure நடந்து போனா எப்டி 18-80 எல்லாம் வச்ச கண்ணு வாங்காம பார்க்குமோ அப்டியே எல்லோரும் என்னையே பார்க்குறாங்க !

எடுத்தேன் பாரு biscuit packet -அ !!!! கண்டக்டர் அப்டியே shock  ஆயிட்டாரு !

அத விட shock ,- டக்குனு அத பிடுங்கி பிரிச்சி அவங்க ரெண்டு பெரும் மின்னல் வேகத்துல அத தண்ணியில நனைச்சி "Cheers"-நு சொல்லி  biscuit -அ தட்டி சாப்டாங்க!


கண்டக்டர் டு தி passengers : டம்மி பீசுங்க ! நாம  தான் ஓவரா நெனைச்சுட்டோம் !

மீ டு தி Gang : நாங்க என்னைக்குமே  டம்மி பீசுங்க தான் ! இந்த உலகம் "அடிச்ச கைபுள்ளை-கே இவ்ளோ இரத்தம் -ஆ ??" - அப்டின்னு எங்கள ஒரு terror பீஸ்-ஆ பார்த்தா அதுக்கு நாம எப்டி மச்சி பொறுப்பு ஆக முடியும்

"கரெக்ட் கரெக்ட்  " - நு சொல்லி காலி கவர்-அ  கசக்கி கீழ போட்டுட்டு, "தண்ணிய  ஊத்திட்டு கப் -ஐயும் தூக்கி வெளிய போட்டுடு "-நு பொறுப்பா  சொல்லிட்டு, திரும்பும் போது தான் தெரிஞ்சுது - "என்னை கப் பிடிக்க விட்டுட்டு எனக்கு குடுக்காம  எல்லாத்தயும் இவனுங்களே தின்னு இருக்கானுங்க!"

Wednesday, June 20, 2012

The power of focus by Jack Canfield - Excerpts


Successful people dont drift to the top. It takes focused action, personal discipline and lots of energy every day to make things happen. The habits you develop from this day forward will ultimately determine how your future works out. Rich or poor. Healthy or unhealthy. Fulfilled or unfulfilled.

Negative habits breed negative consequences. Successful habits create positive rewards. That's just the way life is.

Life will always give you consequences related to your actions.

Your level of brilliance will determine the size of your opportunities in life.

Setting and achieving goals is one of the best ways to measure your life's progress and create unusual clarity.

Creating a successful future takes energy, effort and concentrated thinking.

B-ALERT System:
B - Blueprint
A - Action
L - Learning
E - Exercise
R - Relaxing
T - Thinking


There is a major difference between being busy and taking specific, well-planned action.

There are essentially two things that will make you wiser - The books you read and the people you meet.

TPM - Twenty five Peaceful Minutes (Relaxing for 25 minutes amidst work to regain energy)

If you realized how powerful your thoughts are, you would never think a negative thought.

The most important thing is to be sincere.  Sincerity goes a long way in helping you get what you want in life.

The use of knowledge is your greatest power. Learn more. Become an expert in what you do best.

Confidence is required at the height of your fear. It's one of the life's greatest challenges.

Embrace the fact that success comes from study, hard work, good planning and taking risks. You deserve it if you do all of this.

Confidence is required at the height of your fear. It's one of life's greatest challenges.

When you continuously clean up your unfinished business, life becomes simple and uncluttered. This gives you a surge of new energy.

Confidence grows by doing, not by thinking.

Procastination is a one-way ticket to staying stuck. It's an excuse not to perform.

Some of the most confident and successful people we know have a quiet inner strength that is rarely expressed in gregarious fashion.

When you think you can't, revisit a former triumph.

When you establish trust, the door of opportunity swings wide open and you are welcomed in with open arms.

You will never achieve big results in your life without consistent and persistent action.

When you stand for something and do a remarkable job of it, you attract the top people and create huge rewards for yourself.

All broken relationships can be traced back to broken agreements.

Keep going - success is often just around the corner, for those who won't quit.

Procastination is a thief, waiting in disguise to rob you of your hopes and dreams. If you want proof, take a closer look.

It's more mentally tiring to think about what has to be done, and all the things that might go wrong, than it is to physically do the job.

Many people lose their direction in life because they are easily distracted or influenced by other people. Consequently they wander along bouncing from one situation to the next, like a ball in a pinball machine.



Books mentioned :
1.NLP: The new art and science of getting what you want,
2. The on-purpose person by Kevin.W. McCarthy,
3. The tomorrow trap by Karen peterson.
4.Success through a positive mental attitude by W. Clement Stone
5.Man's search for meaning.
6. Even Eagles need a push
7. The richest man in babylon
8. The wealthy barber
9. The millionaire next door
10. Ten golden rules of financial success
11. The 9 steps to financial freedom
12. Think and Grow Rich
13. Rich dad, poor dad

Monday, June 4, 2012

3 Gurus!

ஒரு குரு தன்னோட மரண படுக்கையில்  இருக்கிறார். அவருடைய கடைசி நிமிடங்களில் அவருடைய சீடர்கள் கேட்கின்றனர்
"குருவே, உங்களுடைய குரு யாரென்று அறிந்து கொள்ளலாமா ? "  என்று. 

குரு சொல்கிறார் - 
எனக்கு மொத்தம் 3 குருக்கள் - 
1 ஒரு திருடன் 
2 ஒரு நாய் 
3 ஒரு 3 வயது குழந்தை 

1 .திருடன் - (எனக்கு இந்த part ஞாபகம் இல்ல.  அதனால, fast forward பண்ணிடுவோம் )

2 . நாய் : 
ஒரு நாள், எதேச்சையாய் ஒரு காட்டில் அமர்ந்து கொண்டு இருந்த பொழுது, அங்கே ஒரு நாய் வந்தது. அதற்கு மிகுந்த தண்ணீர் தாகம் ஏற்பட்டு இருந்தது.  தண்ணீர் தேடி அலைந்த நாய்க்கு அதிர்ஷ்ட வசமாக ஒரு குட்டை தென்பட்டது. அங்கே ஓடிய நாய்க்கு தண்ணீரை எட்டி பார்த்த பொழுது தன் உருவம் தென்பட்டது. அது தன் உருவம் என்று அறியாத நாய், ஒரு பலமான எதிரி நாய் அந்த குட்டையில் இருப்பதாக எண்ணி, பின் வாங்கி ஓடியது. நேரம் ஆக ஆக, அந்த நாய்க்கு தண்ணீர் தாகம் அதிகரித்தது. ஒரு வேளை, அந்த எதிரி நாய் வேறு எங்கும் சென்று இருக்கக் கூடும் என்று எண்ணி மீண்டும் சென்று எட்டி பார்த்தது. ஆனால், அந்த நாய்(பிம்பம்) அங்கேயே இருந்தது. மீண்டும் மீண்டும் சென்று, பார்த்து, பயந்து பின் வாங்கி ஓடி வந்த நாய்க்கு இப்பொழுது தண்ணீர் தாகம் உச்சத்தை எட்டியது. துளி தண்ணீர் இல்லையென்றால் உயிர் மாண்டு விடும் அளவிற்கு தாகம் முற்றியது. சற்றும் எதிர்பாராமல் , தன் சக்தி அனைத்தையும் திரட்டி , என்ன நடந்தாலும் நடக்கட்டும் என்று ஓடி வந்து ஒரே பாய்ச்சலாக குட்டையில் குதித்தது. தான் வந்து பாய்ந்த வேகத்தில் எதிரி நாய் பயந்து ஓடி விட்டதாகவும் எண்ணி பெரும் திருப்தி அடைந்து தனக்கு தேவையான நீரையும் ஆனந்தமாக பருகியது. 

அப்பொழுது தான் உணர்ந்தேன் - நாமும் இப்படி தான் என்று. நாம் செய்ய நினைக்கும் பல வேளைகளில் தேவை இல்லாத பயங்கள், கற்பனைகள் எல்லாம் செய்து கொண்டு அந்த பிம்பத்தை கண்ட நாய் போல் பின் வாங்குகிறோம்.நம் பலத்தை நாம் எப்பொழுதும் உணருவது இல்லை.அந்த நாய்க்கு ஏற்பட்டது போல் அந்த தாகத்தை நாம் உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்றும் செய்ய நினைக்கும் காரியத்தை மிகுந்த தைரியத்துடனும் முழு ஆத்மார்த்தமான சக்தியுடனும் செயல் படுத்த  வேண்டும் என்றும் அந்த நாயிடம் இருந்து கற்று கொண்டேன். 

A related video about fear:

3 . ஒரு 3 வயது குழந்தை   

ஒரு முறை இரவில் ஒரு வீட்டில் அமர்ந்து எழுதி கொண்டு இருந்தேன். பலமாக காற்று அடித்ததில் விளக்கு அணைந்து போயிற்று. அப்பொழுது அந்த வீட்டில் இருந்த பெரியவர்கள், ஒரு மூன்று வயது பெண் குழந்தையிடம் ஒரு சின்ன தீ பெட்டியை கொடுத்து அனுப்பினார்கள். அதை கொண்டு வந்த குழந்தை , அந்த தீ குச்சியை உரசியதில், அந்த குச்சியின் முனையில் தீ பற்றியது. சரி, இந்த தருணத்தை பயன் படுத்தி இந்த குழந்தைக்கு தீ பெட்டி மற்றும் கந்தகம் ஆகியவற்றை பற்றி நாம் அறிந்ததை சிறந்த முறையில்  கற்று குடுப்போம் என்று எண்ணி அந்த குழந்தையிடம் கேட்டேன் 
"இந்த வெளிச்சம் எங்க இருந்து வந்துச்சுன்னு சொல்லு பார்ப்போம்?" என்றேன். 

அதற்கு அந்த குழந்தை சற்றும் எதிர் பாரா வண்ணம் அந்த தீ குச்சியை ஊதி அணைத்து விட்டு "இப்போ அந்த வெளிச்சம் எங்கே போச்சுன்னு நீங்க சொல்லுங்க. அப்புறம் எங்க இருந்து வந்துச்சுன்னு அத வச்சி நான் சொல்றேன் " - என்று தன் பிஞ்சு மொழியில் சொன்னது. சற்று நேரம் வியந்து போனேன். வாழ்க்கையில் நாம் எவ்வளவு கற்றாலும் நாம் கற்க வேண்டியவை ஏராளம் ஏராளம் என்றும் எந்த தருணத்திலும் நாம் அறிந்தவை மட்டுமே உலகம் என்றும் இருந்து விடக்கூடாது என்றும்   அந்த பிஞ்சு குழந்தை தன் மழலை மொழிகளில் பாடம் கற்பித்து விட்டு, அதை எனக்கு கற்பித்த கர்வமோ , பெருமிதமோ இன்றி விளையாட சென்று விட்டது. மேலும் "இவன் என் சீடன், இவன் என்னிடம் பயின்றான்" என்பது போன்ற பெருமைகளிலும் எனக்கு எந்த வித பங்கும் இன்றி செல்லுதலே உயர்ந்த தன்மை என்றும் உணர்தேன்.

சுபம் ! முற்றும்! The end! 

Thursday, April 5, 2012

பேரிச்சம் பழம்

இந்த கதையில் வரும் அனைத்து சம்பவங்களும் முண்டகண் ஈஸ்வரி மீது ஆணையாக உண்மை, சத்யம்!


Location : வேற எங்க? நாலு வருஷமும் விட்டத்த பார்த்தே கழிச்ச hostel தான்.

காட்சியின் பிழைகள் :
"Fast  bowler"  மகாதீர் முகமது,
2. "கஷ்டப்பட்டு படிக்கிற Dote student"  மகேந்திரன் 
&
லேடீஸ் & gentlemen , let  மீ introduce ,
3. "ஜிங்கம்" (இவரு தான், இந்த story -ஓட ஹீரோ, சத்தியமா நான் இல்லீங்க)


மகாதீர், துபாய் குறுக்கு சந்துல இருந்து பேரிச்சம் பழம் வாங்கிட்டு வந்து இருந்தாரு. இங்க, பேரிச்சம் பழத்த "zoom" பண்ணி பார்த்தா ஒரு உண்மை தெரியும். அதாவது, அந்த பேரிச்சம் பழத்துல, பேரிச்சம் பழ கொட்டைக்கு பதிலா பாதாம் கொட்டை இருக்கும். ரொம்ப நல்லா இருக்கும். அது தான் அதோட speciality .


மகாதீர் and மகேந்திரன், பாதாம் போட்ட பேரிச்சம் பழத்த ருசிச்சி கிட்டு இருந்தப்போ தான், நம்ம ஜிங்கம் ஒரு செம bgm -ஓட entry ஆகுது! :)

ஜிங்கம் : ஏலே மக்கா, என்ன டா சாப்பிடறீங்க ?

மகாதீர்  : பேரிச்சம் பழம்  எடுத்துக்கோ மச்சி !

ஜிங்கம் :  கொஞ்சம் விட்டு இருந்தா, காலி பண்ணி இருப்பீக போலவே?

மகாதீர்  : உனக்கு குடுக்காம சாப்பிட முடியுமா? நீங்க எல்லாம் எவ்ளோ பெரிய ஆளு ?

ஜிங்கம் :தெரிஞ்சா சரி தான்.

ஜிங்கம் இப்போ கொஞ்சம்  பேரிச்சம் பழத்த முரட்டு தனமா மென்னு கிட்டு இருக்கு. ஜிங்கம் வாய்க்கு இப்போ அந்த பாதாம் கொட்டை தட்டு படுது !

Dote  Student  மகேந்திரன் : (குறும்பா)  டேய், அதா முழிங்கிட போற !

ஜிங்கம் விடுமா? எவ்ளோ sharp !, ஜிங்கம், அத பேரிச்சம் பழ கொட்டை னு நெனைச்சி அந்த கொட்டையை வேகமா துப்பி பத்திரமா கையில வச்சிகிச்சு !

 ஜிங்கம் : முழிங்கிடுவோமா நாங்க எல்லாம் ? சின்ன பிள்ளை-ல இருந்தே நான் வெவரம்-னு எங்க ஆத்தா சொல்லும்டா! எப்புடி !


மகாதீரும் மகேந்திரனும் விழுந்து விழுந்து சிரிச்சத பார்த்து, ஜிங்கம் என்ன நடக்குது னு புரியாம முழிச்சி கிட்டு கர்ஜித்தது !

மகாதீர்  : டேய், அது பாதாம் டா, வாய்ல போட்டு சாப்டு டா !

ஜிங்கம் முறைச்சி கிட்டே அத மென்னு பார்த்தப்ப தான் சிங்கத்துக்கு உண்மை  தெரிஞ்சுது, அது உண்மையிலயே பாதாம்னு !

வெறி கொண்ட சிங்கம் தன்னை ஏமாற்றிய மகேந்திரனை முறைத்து விட்டு , எப்படியும் சந்தர்பம் கெடைக்கும் போது பழி தீர்க்கும் முடிவுடன்,  ஓர வாய் சிரிப்புடன் வெளி ஏறியது !

வெளியே சென்ற  சிங்கத்துக்கு சட்டென்று ஒரு சிந்தனை ! Shoaib அக்தர் -அ விட வேகமா ரூமுக்குள்ள வந்தது !

Dear Readers of  this  post ,  இப்போ, இந்த அடி பட்ட சிங்கம் எப்படி மகேந்திரனை பழி வாங்குச்சுனு பார்க்க போறோம். So , எல்லாரும் கொஞ்சம் மனச திட படுத்திக்கோங்க!

உள்ள வந்த சிங்கம்  மகாதீரையும் மகேந்திரனையும் முறைத்து பார்த்து
 முறுக்குன்னு மூக்க புடுங்கிக்கிற மாதிரி சட்டென்று கேட்டது ஒரு  கேள்வி! ஆனா, கொஞ்ச பாவ பட்ட, ஏக்கம் கொண்ட தோரணையில்,

"ஏலே மக்கா, பேரிச்சம் பழகொட்டை தான், பாதாமாடா ? இது தெரியாம சின்ன வயசுல இருந்து நெறைய தடவ தெரியாம கீழ துப்பிட்டேனே டா ? "



மகாதீரும் மகேந்திரனும் இப்போ அத விட அதிகமா சிரிச்சப்போ, சிங்கத்துக்கு இன்னும் conpeesion அதிகம் ஆச்சே தவிர உண்மை புரியலீங்கோ!


வாழ்க சிங்கம்! வளர்க பேரிச்சம் பழகொட்டை !

Thursday, March 15, 2012

Nungambakkam (s)Tation

Seth Godin எழுதின  'Linchpin' படிச்சி கிட்டு இருந்தேன்.


"No one is a genius all the time. Einstein had trouble finding his house when he walked home from work every day.". - அப்டின்னு ஒரு லைன் படிச்சேன்.

ஒரு வகையில நாமளும் ஐன்ஸ்டீனும் ஒன்னோ அப்டின்னு தோனுச்சு . எந்த ஒரு ரூட்டும் ஒழுங்கா  இன்னிக்கு வரைக்கும் ஞாபகம் இருந்தது  இல்ல.  அதனால பைக் ஓட்டினா கூட தெரிஞ்ச ரூட்ல மட்டும் தான் ஓட்டறது. புது ரூட்டு, புது இடம் அப்டினா பெரும்பாலும் ஒரு கண்டக்டர்(two wheeler தான்) இல்லாம போறது கெடையாது !


அப்படி கண்டக்டர் இல்லாம போன முறை எல்லாம் எதாவது ஒரு வகையில ஒரு tragedy நடக்கும். அத வெளிய சொல்லாம தொழில் பண்ணியே பழகிட்டேன். ஒரு முறை வள்ளுவர் கோட்டம் ல இருந்து நுங்கம்பாக்கம் ஸ்டேஷன்-கு போக வேண்டிய ஒரு கட்டாயம். ஒரு 1km  -குள்ள minimum  ஒரு 5 பேர கேட்டு கிட்டே போனா தான் சரியாய் போறோம்-கிற ஒரு திருப்தி. கொஞ்ச தூரம் போனேன். ஒரு ஆட்டோகார அண்ணன் இருந்தார் ( பொதுவா, இவங்கள மட்டும் நம்பி ரன்னிங் -ல கூட ரூட் கேக்கலாம் )

me  : "அண்ணா, நுங்கம்பாக்கம் ரயில்வே ஸ்டேஷன் எப்படி போகணும் ?"

ஆட்டோகார அண்ணா  : "நுங்கம்பாக்கம் tation -ஆ ? " நு பக்கா சென்னை பாஷையில கேட்டாரு.

மீ : "ஆமாம் நா "

ஆட்டோகார அண்ணா  : "நேரா போயிகுனே இரு. left  சைடு ல tation  வரும் "

"ஒகே. tanks னா " - நு சொல்லிட்டு கொஞ்ச தூரம் போனேன். ஒரு சிக்னல் வந்தது.(pizza  corner opposite சிக்னல் )  நின்னு கிட்டு இருந்தேன் .   Right சைடு ல ஒரு கட் இருந்தது (Towards  Sashtri பவன்  ) . நெறைய வண்டிங்க அதுல போயி கிட்டு இருந்தது. ஒரு வேளை, நம்ம ஆட்டோ கார அண்ணன் சொன்ன "Straight" இது தானோ நு ஒரு டவுட்.

பக்கத்துல ஒரு மெக்கானிக் அண்ணன்   TVS 50 ல இருந்தார். ஒரு verification கு  "அண்ணா, நுங்கம்பாக்கம் ஸ்டேஷன் எப்படி போகணும்?" நு கேட்டேன். இந்த ரைட் ல போ.  திரும்ப ரைட் கட் பண்ணு. பாஸ்போர்ட் ஆபீஸ் வரும். திரும்பி straight -ஆ போ. ரைட் ல கட் பண்ணு. அப்புறம் , left  , straight . லெப்ட் சைடு-ல tation  வரும்" நு சொன்னாரு.

"அட. கரெக்ட் தான் போல. அவரும் Left  சைடு தான் சொன்னாரு. இவரும் Left சைடு தான் சொல்றாரு. கரெக்ட்-ஆ தான் போயி கிட்டு இருக்கோம்  "- நு ரைட் சைடு ல போனேன். எல்லாம் ஓகே.

டிராபிக் கொஞ்சம் ஜாஸ்தியா இருந்துச்சு.  நாம சும்மா இருப்போமா?, ஒரு கார்ல ஒரு அம்மணி இருந்தாங்க. "துடிக்குது புஜம்; ஜெயிப்பது நிஜம்" நு சொல்லி,  முகத்த lighta துடைச்சி கிட்டு  ஒரே செகண்ட்ல அழகாகி  "Excuse me, How do I go to Nungambakkam Station?" - நு ஸ்மார்ட்-ஆ   கேட்டேன்.  "Go all the way straight and take right uncle"- nu அவங்க சொன்னங்க.

டக் நு ஒரு 4 செகண்ட்ஸ் rewind பண்ணி பார்த்தா தான் தெரியுது, ஒரு கேப்ல அந்த பொண்ணு "அங்கிள்" நு சொல்லி reply  பண்ணி இருக்குனு. ஒரு வேளை, சின்ன தம்பி படத்துல வர்ற கவுண்டமணி மாதிரி மாலை கண் நோயா இருக்கும் நு நெனைச்சி மனச தேத்தி கிட்டேன்.

சரி நு அந்த aunty (நான் இப்போ பழி வாங்கிட்டேன்) சொன்ன ரூட்ல  போனேன். திரும்ப same சிக்னல் -எ நிக்குறேன். "இதுக்கு தான் பல் புடுங்க பட்ட பாட்டி(நான் இப்போ 2nd  டைம் பழி வாங்குறேன் ) கிட்ட எல்லாம் வழி கேக்க கூடாது-ங்கிறது நு நெனைச்சி கிட்டு. இது தான் தப்பான ரூட் ஆச்சே நு சிக்னல்-ல நேரா போனேன்.

லயோலா காலேஜ் போற வழி. "ஆல் இஸ் வெல்" நு போயி கிட்டு இருக்கும் போது மண்டைக்குள்ள மணி அடிச்சது. "தம்பி, நீ பாட்டுக்கு போயி கிட்டே இருக்கியே ? இத்தன பேரு சும்மா தானே போயி கிட்டு இருக்கான். அவனுக்கு ஒரு job  opportunity  குடு"- நு சொல்லுச்சி. ஒரு பையன் சைக்கிள் -அ ஓரமா நின்னு பேசி கிட்டு இருந்தான்.

"தம்பி சார் , தம்பி சார், நுங்கம்பாக்கம் ஸ்டேஷன் எப்படி போகணும் " நு கேட்டேன்.

"tation போர்தக்கு ஏன் நீ இப்படி வர்ற ?. ரைட் ல போயி கட் பண்ணி Left  கட் பண்ணி போ " நு சொன்னான்.  "வருங்கால இந்தியா ஒளிமயமா இருக்கும்-ங்கிற நம்பிக்கைய நீ குடுக்கிற டா தம்பி" நு சொல்லி , ரைட் ல கட் பண்ணினேன்.

போயி கிட்டே இருக்கேன். திரும்ப சாஸ்த்ரி பவன், திரும்ப same சிக்னல் கிட்ட போக போகிறதுக்கு ரைட் கட் பண்ண போறேன். என்ன மாதிரியே decent -ஆ ஒருத்தன் இருந்தான். "சார், Nungambakkam ஸ்டேஷன் - கு எப்படி போகணும் ?".

அவர் " ரைட் கட் பண்ணி, straight -அ போங்க " நு அவரும் சொன்னாரு.

"சார், அந்த சிக்னல்-அ ரைட் கட் பண்ண கூடாது தானே நு confirm பண்ணினேன்".

"அப்டி போகாதீங்க சார். அப்புறம் , லூசு மாதிரி இந்த இடத்தையே சுத்தி வந்து இங்க நிப்பிங்க" நு சிரிச்சி கிட்டே சொன்னாரு.


 அப்டி தானே டா , ரெண்டு தடவ சுத்தி கிட்டு வந்து நிக்கிறேன் நு நெனைச்சி கிட்டு, "ரொம்ப கரெக்ட்-அ சொன்னிங்க சார் , உங்க தாத்தா பேரு vascodagama -வா? இப்டி ரூட் சொல்றீங்க  நு" கேட்டுட்டு திரும்ப சிக்னல்ல போயி நின்னேன்.

"விவேக்,  இனி நீ பூங்கொடி அல்ல , போர்க்கொடி!!! சண்முகம், உட்ரா போவட்டும் " நு நாட்டமை விஜய குமார் மாதிரி எனக்கு நானே  நெனைச்சி கிட்டு "இனி யாரையும், சாரி, எவனையும், ரூட் கேக்க கூடாது" நு ரொம்ப strong -அ decide பண்ணி வண்டி ஒட்டி கிட்டு போனேன்.

திரும்ப மண்டையில மணி அடிச்சது

"ஏற்கனவே, அவங்களுக்கும் நமக்கும் வாய்கா தகராறு " - ங்கிற range -ல "ஏற்கெனவே , 2  தடவ ஒரே ஏரியா-வா சுத்திட்டோம். திரும்ப இந்த மிஸ்டேக்-அ பண்ணினா, நம்ம 3 வயசு எதிர் வீட்டு பையன் கூட மதிக்க மாட்டன்-னு புரிஞ்சிக்கோ டா "- னு ஒரு வாய்ஸ்.

So , அங்க ஒரு பெரியவர் இருந்தாரு. லைட்-ஆ மப்புல இருந்தாரு. அது நமக்கு எதுக்கு? நாம போக வேண்டிய இடம் நுங்கம்பாக்கம் ஸ்டேஷன். அதுக்கு அவர் கிட்ட வழி கேப்போம் னு

"அண்ணா, நுங்கம்பாக்கம் ஸ்டேஷன் எப்படி னு போகணும்?" -னு same  question -அ shame -எ இல்லாம 29th time கேட்டேன்.

"ஏன்பா, tation போறதுக்கு என்னத்துக்கு நீ இந்த பக்கம் வர்ற னு , ரைட் ல போயி ............ னு அந்த சனியன் பிடிச்ச சிக்னல்-கு போறதுக்கு  same ரூட். இருந்தாலும்

"நம்ம ஊருல, தெளிவா இருக்கிறவன் எவனும் உண்மை பேச மாட்டான். சரக்குல இருக்கிறவன் காந்தி மேல சத்தியமா  பொய் பேச மாட்டான் " ங்கிற - ஐன்ஸ்டீன்'ஸ் 4th law of motion படி திரும்ப சாஸ்த்ரி பவன்.

"டேய். இங்க சாஸ்த்ரி பவன்-கு பதில் ஒரு பிள்ளையார் கோவில் இருந்து இருந்தா, மூணு தடவ சுத்தினதுகு புண்ணியம் ஆவது கெடைச்சி இருக்கும்" னு நெனைச்சி கிட்டு. அந்த சிக்னல் -கு முன்னாடி LEFT -ல வண்டிய நிறுத்திட்டேன்.

"நான் என்னடா கேட்டேன் இந்த சமூகத்த? ஒரு ஸ்டேஷன்-கு போக வழி கேட்டேன். அதுக்கு ஏன்டா இத்தன பேரு சேர்ந்து சதி பண்றீங்க?" - னு இந்த சமூகத்து மேல இருந்தா கோவத்த வெளி காட்ட முடியாம தவிச்சி கிட்டு இருந்தேன்.

அப்போ, ஒரு டீ கடையில போயி, பவ்யமா கைய கட்டி கிட்டு

"அண்ணா, எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும். நுங்கம்பாக்கம் ஸ்டேஷன்......" அப்டின்னு சொல்லும் போது என் கண் லைட்-அ கலங்க ஆரம்பிச்சிடுச்சு.

டீகடை கார அண்ணன் "இருங்க தம்பி, ஏன் என்ன ஆச்சு ? Left -ல போங்க. ஒரு 10 அடியிலே tation வந்துடும்"-னு சொன்னாரு.

அட என்ன டா இது , இவரு புதுசா ஒரு ரூட் சொல்றாரே னு நெனைச்சேன்.

எப்பவுமே, சிக்னல் -கு போறதுக்கு  Right -ல கட் பண்ணுவோம். இவரு LEFT கட் பண்ண சொல்றாரு னு ஒரு சந்தேகம் இருந்தாலும், சிகப்பா இருக்கிறவன் பொய் பேச மாட்டேனே னு நம்பி LEFT -ல கட் பண்ணேன்.  ஒரு train போற ஒரு சின்ன சவுண்ட் கூட இல்ல. ஒரு வேளை , ஓவர் நைட் ல underground ல train -அ ஓட விட்டுடானுன்களோ னு நெனைச்சேன். ஆனா, அதுவும் இல்ல.

அப்போ, அந்த சைடு-ல ஒரு பெரியவர், ஒரு 70 வயசு இருக்கும். ஷர்ட் tug -in  எல்லாம் பண்ணிக்கிட்டு பொறுப்பா போயி கிட்டு இருந்தார்.

"சார், நுங்கம்பாக்கம் ஸ்டேஷன் "- அப்டின்னு சொன்னேன்.

இதோ, just  opposite -ல இங்க தானே சார் இருக்குனு கை காமிச்சார்.

இந்த situatation -கு விஜயகாந்த் கண் மாதிரி, என் கண்ணுக்கு ஒரு zoom  வச்சிங்க னா, அதுல கண்ணீர் வராது , ரத்தம் தான் வரும்.

ஏன்னா,  அது நுங்கம்பாக்கம் போலீஸ் ஸ்டேஷன் !

"என்னோட சாரி டு தி சமூகம். நீங்க கரெக்ட்-ஆ தான்டா சொல்லி இருக்கீங்க! நான் தான் டா  தப்பா கேட்டுட்டேன் ! என்ன decent -னு நெனைச்சவன் எல்லாம் railway  ஸ்டேஷன் கும், என்னை கிரிமினல் -னு நெனைச்சவன் எல்லாம் போலீஸ் ஸ்டேஷன் கும் வழி சொல்லி இருக்கீங்க! "

அடுத்து ஒருத்தன் அந்த வழிய போனான். இப்போ கேக்குறேன் பார்ற ரூட்-அ -னு நெனைச்சிகிட்டு,  "சார், இந்த train எல்லாம் வந்து நிக்குமே, கூ- சிக்கு புக்கு, கூ- சிக்கு புக்கு னு  வாயில கைய வச்சி train  மாதிரி ஒட்டி காமிச்சி, அது நுங்கம்பாக்கம் ல எங்க சார் வந்து நிக்கும் னு கேட்டேன்.

"அட, என்னப்பா நீ, நுங்கம்பாக்கம் tation னு சொன்னா சொல்ல போறேன். இதுக்கு என்னமோ, வாயிலயே train  எல்லாம் ஓட்டி காமிக்கிற ?" - னு கேட்டான்.

"மறுபடியும் நுங்கம்பாக்கம் tation -ஆ? நான் வரல டா இந்த ஆட்டதுக்கு !"

Monday, March 12, 2012

இது எல்லாம் யாரின் குற்றம் . கல்யாணியின் குற்றமா?


நாள் : என் அப்பாவுக்கு மிகவும் பிடிக்காத ஏதோ ஒரு நாள் (ஏன்னா நான் ஊருக்கு வர்ற நாள்)

இடம் : oc  foreign  சரக்குக்காக மக்கள் ஆவலுடனும் அக்கறையுடனும்  காத்திருக்கும் இடம். (ஏர்போர்ட்)


நான் ஒரு Sony Bravia BX420  TV வாங்குனேன். ஒரு gethula ஒரு flow -ல   அப்டி சொல்லிட்டேன். என் friend  காசு குடுத்தான். நான் வாங்கிட்டு வந்தேன். நான் கடைசியா வாங்குன electronic item  - பிலிப்ஸ் transistor  தான் :)

 சென்னை ஏர்போர்ட்ல ஒரு ஓரமா, கொண்டு வர்ற  இந்த டிவி சமாசாரம் எல்லாம் ஒதுக்கி வச்சி இருந்தாங்க. அத pickup  பண்ணிட்டு வந்த பொது, நம்ம வசூல் ராஜா FRCS  வந்து மடக்குனார்!

வசூல் ராஜா : You have to pay duty for this TV.

Me : How much sir?

நம்ம  dressing sense, ஊர் அறிந்த விஷயம்.  மேலும் கீழும் பார்த்தாரு ! "ரொம்ப dummy பீஸ் போல!" - நு நெனைச்சார் போல ! போதாதா குறைக்கு நான் வெளுப்பா(I am orey puppy shame) இருக்கிறதுனால அவர் என்ன north  இந்தியன்-நு நினைச்சிகிட்டார்.

எல்லார் கிட்டயும் சன் டிவி . என் கிட்ட மட்டும் BBC . அப்டி ஒரு conversation. நான் தமிழ்ல பேசினா கூட, reply  BBC தான் !

 வசூல் ராஜா : Do you have bill for this ?

Me : Yes சார் - நு சொல்லி பில்ல குடுத்தேன். .(பில் இல்லனா என் friend என்னிய நம்பி சல்லி காசு கூட குடுக்க மாட்டேன்.)


வசூல் ராஜா ஒரு பேப்பர் எடுத்தார். ஏதோ calculation  எல்லாம் போட்டாரு. பில் amount  - $1100

ஏதோ multiplication  ட்ரை பண்ணினார். நான் சும்மா இல்லாம

"Sir. 1 dollar = Rs.39.50" நு சொல்லிட்டேன் . ( சாரி, இது என்னோட birth  defect . நம்ம வாய் அந்த மாதிரி)

ஒரு முறை முறைச்சார் என்ன பார்த்து. நான் பம்மல்.கே.சம்மந்தம் மாதிரி ஆயிட்டேன்.

After  doing  the Multiplication of the geometry of the algorithm and applying the Pythagoras theorem, ரிஷப ராசி, ரோகினி நட்ச்சரத்தின் படி, நான் pay பண்ண வேண்டிய amount
Rs .12000 - அ high jump பண்ணுது  !

நான் முறுக்குன்னு மூக்க புடிங்கிக்கிற மாதிரி ஒரு கேள்வி கேட்டேன்

"Sir, Is there any document / proof to calculate how much I need to pay ? "

சினம் கொண்ட சிங்கம் வெகுண்டு எழுந்தது. அப்டியே டேபிள்  drawer -அ ஓபன் பண்ணினாரு. ஒரு muddy  white பேப்பர் (brown -நு கூட சொல்லலாம்). அதுல பென்சில்-ல கட்டம் கட்டி ஒரு matrix  மாதிரி இருக்கு. சத்தியமா சொல்றேன் - அது கொண்டு போயி அகர்வால் hospital -ல பூத கண்ணாடி போட்டா கூட அதுல என்ன இருக்குனு தெரியாது. என்னன்னவோ numbers இருந்தது. தாயம் விளையாடறதுக்கு வரைஞ்சி வச்சி இருப்பானுங்க-நு நெனைக்கிறேன்.

"லுக் here " - நு பிளாஷ் பண்ணிட்டு நான் பார்கிறதுக்குள்ள பத்திரமா எடுத்து உள்ள தூக்கி எறிஞ்சார் !

நான் கேட்டேன் - "There is no Government seal / any instructions / anything pertinent to duty calculation in this. How do you expect me to go about it?" 

அப்புறம், சிங்கத்துக்கு சினம் அடங்கல. விஜயகாந்த்-அ விட கோரமா கண்ண சிவப்பாக்கி ,   ஒரு அரை மணி நேரம் என்னை ஓரமா நிக்க வச்சி அடுத்தடுத்த வசூல கவனிக்க ஆரம்பிச்சார்.

நமக்கு தான் ஸ்கூல்-ல காலேஜ்-ல எல்லாம் கிளாஸ்-கு வெளிய நின்னு 15 + years  of experience  இருக்கே. நானும் நின்னு கிட்டே இருந்தேன். என்ன தான் ஆகுதுன்னு பார்ப்போம் நு.



Same டிவி கொண்டு வந்த இன்னொருத்தர் ( a  honest  பெர்சன்) , அவருக்கு Rs .8000  duty நு மீட்டர் போட்டாங்க ) .

Honest  person  : " நீங்க பில் போட்டு குடுங்க சார். நான் காசு pay பண்றேன்".- நு சொல்லி கையில காசும் குடுத்துட்டாரு.

சி.கொ.சி  to  another சி.கொ.சி :  சார், பில் கேக்குறாங்க சார்.

Another  சி.கொ.சி  : Duty  pay  பண்ணினா எல்லாம் பில் குடுக்கிறது கெடையாது !

அற்புதம், அபாரம், excellent  நு சொல்லி கிட்டேன்.

சி.கொ.சி  to me : Do you have at least Rs.2000 ? You go and give Rs.2000 to an officer in that room.

எப்படியும் actual amount  என்ன நு சொல்ல போறது கிடையாது. மாரியாத்தா மேல சத்யம் பண்ணினாலும் பன்னுவேனே தவிர Bill  எல்லாம் குடுக்க மாட்டேன் நு ஒரு பிடிவாதம் வேற. வசூல் எல்லாம் ஒழுங்க நடக்குதானு செக் பண்ற ஒரு உயர் அதிகாரி வேற. நான் யார் கிட்ட போயி என்ன சொல்ல?    அந்த situation ல என்னால என்ன செய்ய முடியும்?


அந்த ரூமுக்கு போன்னேன். சந்தனம், குங்குமம், விபூதின்னு ஒரு 8  layers நெத்தியில வச்சி கிட்டு பவ்யமா கடமை தவறாம "குடுங்க சார்" அப்டின்னு பவ்யமா வாங்கி கிட்டார் இன்னொரு உயர் அதிகாரி. இங்கே, லஞ்சம் குடுத்ததுக்காக என்னை திட்டனும், அடிக்கணும், வேற எதாவது பண்ணனும் நு நினைக்கிற யாரு வேணும்னாலும் என்ன வேணும்னாலும் பண்ணலாம்! நான் குத்தத்தை ஒப்புக்கிறேன் சாமி! "இது எல்லாம் யாரின் குற்றம் . கல்யாணியின் குற்றமா?" - நு சிவாஜி கணேசன் மாதிரி வசனத்த நெனைச்சி கிட்டு வெளிய வந்துட்டேன். நினைக்க மட்டும் தான் முடியும். பேச கூட முடியுமா என்ன ?

நானும் நான் ரொம்ப மதிக்கிற என்னோட friend Dr. ரபிந்த்ரநாத் -உம் ஒரு முறை எதேச்சையாய் train ல மீட் பண்ணப்போ

"தலை வலின்னா metacin , வயித்து வலின்னா  digene , cold  ஆனா cold  act  நு சொல்ல தெரியுற நமக்கு ஒரு டிராபிக் constable ஒரு license இல்லாம புடிச்சாலோ ஹெல்மெட் போடாம வண்டி ஓட்டினாலோ என்ன ரூல்ஸ், எவ்ளோ fine . என்ன section  நு நமக்கு சொல்ல தெரியுதா ? இது தலைவலிக்கு  metacin -ங்கிற information -அ விட எவ்ளோ முக்கியம் அப்டிங்கிறத நாம உணருவது இல்ல" நு சொன்னார்.

எவ்ளோ எதார்த்தமான ஒரு உண்மைன்னு புரிஞ்சது! ஏன் நமக்கு சின்ன சின்ன ரூல்ஸ் கூட தெரியறது இல்ல நு யோசிக்க வைக்குது !

coming  bak  to  சோனி டிவி,
அப்புறமா தான், ஒரு பேப்பர்-அ  படிக்கும் போது தான் நான் எவ்ளோ pay  பண்ணி இருக்கணும்னு தெரிஞ்சுது.

As per rules, only Rs.25000 of the amount is duty-free. மீதமுள்ள amount -கு 35 % flat  tax .

அப்டி பார்த்தா, நான் கொண்டு வந்த Rs .40000  பெறுமானம் உள்ள பொருளுக்கு
Rs  15000  * 35 /100  நு போட்டா Rs .5250  pay  பண்ணி இருக்கணும். பிளஸ் எதாவது additional  tax கட்டி இருக்கணும்.

 அப்புறம் தான், ஒரு சைட்-ல இதுக்குநு ப்ரோக்ராம் பண்ணி இருக்காங்க நு தெரிஞ்சுது.  URL : http://globaltaxguru.in/Indiatimes-2

நான் கொண்டு வந்த பொருளுடைய மதிப்பை அதில் enter  பண்ணி பார்த்தப்ப தான் தெரிஞ்சுது ! அதோட ஸ்க்ரீன்ஷாட் இங்கே !


 ஒன் மோர்  reference :

http://qna.economictimes.indiatimes.com/Taxes/Customs/dear-sir-i-am-working-as-a-it-professional-in-australia-deputed-by-indian-company-on-work-visa-for-more-than-3-years-and-permanently-returning-back-to-india-early-next-year-i-ve-recently-bought-a-40-inch-3d-led-tv-for-aud-1000-00-equal-to-rs-50000-could-you-please-advise-how-much-custom-duty-i-ll-have-to-pay-in-india-i-ll-be-bringing-tv-as-a-check-in-beggage-to-india-thanks-a-lot-regards-lc-510297.html


அடுத்த முறை நீங்க யாராவது பொருள் ஏதேனும் கொண்டு வந்தால் இத calculate  பண்ணி, பிரிண்ட் அவுட் எடுத்து கையில் வைத்து கொள்ளவும் !

ஆனா "இது எல்லாம் செல்லாது செல்லாது"-நு உயர் அதிகாரிகள் சொன்னா அதுக்கு என்ன பண்றது-ங்கிற கேள்விக்கு என்னோட answer  - "Question  Pass . "

Thursday, March 8, 2012

My Wedding Invitation - U r invited!

"Friends,

It gives me immense pleasure in inviting you all for my wedding with....."

அப்படின்னு invitation-அ டைப் பண்ணும் போது ..

My room mate : "டேய் மச்சி, எழுந்திருடா, ஆபீஸ் போகலியா இன்னிக்கு "

Me : அடச்சே! இதுக்கு தான் டா தூங்குறதுக்கு முன்னாடி சரவணன் மீனாச்சி சீரியல் எல்லாம் பார்க்க கூடாது நு நெனைச்சிகிட்டு "Thanks machi" அப்டின்னு சொல்லி எழுந்தேன்.

சும்மா உட்கார்ந்து கிட்டு இருக்கிறவன் வாழ்க்கைல எல்லாம் தென்றல் வீசுது, புயல் மையம் கொள்ளுது! நம்ம full speed-ல fan  போட்டுட்டு பக்கத்துல போயி உட்கார்ந்தா  கூட காத்து வர மாட்டேங்குதே நு ஒரு feelings of india.


வாழ்கையில நான் கத்து கிட்ட 2  முக்கியமான பாடம் தான் என்னை marriage-ல ஒரு interest இல்லாம வச்சிருக்குன்னு நெனைக்கிறேன்.

Number 1: A mistake is a mistake only when repeated. ;

இயர்: 1997
திருவள்ளுவர் மேனிலை பள்ளி, குடியேற்றம்.
ஏழாம் வகுப்பு , ஆ பிரிவு.
திங்கள் கிழமை (ரொம்ப நல்லா ஞாபகம் இருக்கு) 


வழக்கம் போல சாயுங்காலம் home work  எழுதலாம் நு note book எடுத்தேன். 
என்னுடைய நெருங்கிய தோஸ்து(ரொம்ப நல்லவன்!) எங்க வீட்டுக்கு வந்து இருந்தான்.

தோஸ்து : என்ன மச்சி , என்ன எழுதுற ?

நான் : Geography homework  நாளைக்கு submit  பண்ணனும் ல , அது தான் எழுதலாம் நு எடுத்தேன் !

தோஸ்து : நீ எல்லாம் என்ன கிளாஸ் கவனிக்கிற ? வெள்ளி கிழமை submit  பண்ணினா போதும் நு miss சொன்னாங்களே , அதா நீ கவனிக்கலியா?

நான் : அட , அப்டியா ? அப்போ நாளைக்கு பொறுமையா எழுதலாமே ! 

தோஸ்து : அத தானே நானும் சொல்றேன் ! வா இப்போ book cricket விளையாடலாம் !

நான் : இதுக்கு தான் டா உன்னை மாதிரி விவரமா ஒரு friend  வேணுங்கிறது !

தோஸ்து : விட்ரா விட்ரா ! இதை எல்லாம் போயி பெருமையா பேசி கிட்டு !




மறு நாள் காலையில first  period - Geography  class :

டீச்சர் : Home work பண்ணாதவங்க எல்லாம் வெளிய போயி நில்லுங்க !

நான் (to  தோஸ்து)  :டேய் என்னடா, வெள்ளி கிழமை தான் submit  பண்ணனும் நு சொன்ன ! இப்போ , இன்னிக்கே கேக்குறாங்க !

தோஸ்து : (with  a  light-a ஒரு ஸ்மைல்), வெளிய போயி நின்னு கிட்டு ஜாலியா பேசலாம் வா

அப்புறம் , ரெண்டு கையிலயும் பிரம்பிலியே சுளீர் சுளீர் நு அடி விழுந்தது ! ஆனா, என் தோஸ்து ஹாப்பியா இருந்தான்


நான்: ஏன் டா இப்டி பண்ண ? நான் ஆவது homework எழுதி இருப்பேன் ல ?

தோஸ்து :அது ஒன்னும் இல்ல டா ! எனக்கு இன்னிக்கு தான் submit  பண்ணனும் நு நல்லா தெரியும் ! எனக்கு எழுதுற மூட் இல்ல! அப்புறம் நான் மட்டும் தனியா அடி வாங்கணும் ! நீ அப்புறம் கிண்டல் வேற பண்ணுவ! அது தான் ! இப்போ பாரு ! நீ என்ன கிண்டல் பண்ண முடியாது பாரு !

இன்று : 2012 
அவனுக்கு கல்யாணம் ஆகிடுச்சு ! முன்ன மாதிரியே ஜாலியா இருக்கிற மாதிரி நடிக்கிறான் ! "எப்ப மச்சான் உனக்கு கல்யாணம் ? சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கோ டா ! வாழ்கை எவ்ளோ ஜாலியா இருக்கும் தெரியுமா ?" - நு அடிக்கடி missed கால் குடுத்து குடுத்து கேக்குறான் !

ஒரு சின்ன comparison  பண்ணி பார்த்தா

1997  தோஸ்து's நல்ல எண்ணம் = 2012  தோஸ்து's நல்ல எண்ணம் !

1997   7th  standard  home work advice   = 2012  Marriage advice

1997  பிரம்படி in both the hands + அவமானம் =  வாழ்கை முழுசும் அவமானம் + தர்ம அடி + ஊமை காயம்  + செலவு !

So, A mistake shouldn't be repeated. இப்போ இந்த மாதிரி வெளிய நின்னு அடி வாங்கி கிட்டு இருக்கிற நெறய நண்பர்கள் இப்படி தான் நான் மட்டும் கிளாஸ் உள்ள எப்டி ஜாலியா உட்காரலாம்னு மனம் நொந்து, வெந்து எனக்கு அட்வைஸ் பண்றாங்க நு புரியுது !

 
 Number 2: You must learn from the mistakes of others.

ஒருத்தர் ரெண்டு பேரு அப்டினா பரவ இல்ல நு சொல்லலாம் ! இத்தன பேரு தப்பு பண்ணி மாட்டிக்கும் போது , அது சுருக்கு நு , அது அவங்க பண்ற எவ்ளோ பெரிய mistake  நு புரியுது ! நான் கல்யாணத்த பத்தி தான் சொல்றேன்.
சரி, ஒரு வேளை, நம்ம தப்பா புரிஞ்சி கிட்டோமோ நு நெனைச்சி கிட்டு, சுமார் 10  பேரு கிட்டே ஒரு ரகசிய சர்வே எடுத்தேன் "மச்சி, இப்போ சாமி உன் முன்னாடி  வந்து உனக்கு marriage  ஆனது எல்லாம் போங்காட்டம்! செல்லாது செல்லாது ! நீ மறுபடியும் bachelor  பா  நு சொன்னா என்ன பண்ணுவ " நு கேட்டேன்! . பெரும்பாலான replies  இப்படி தான் வந்தது "ஒரு கிட்னியை வேணும்னாலும் எடுத்துக்குங்க சாமி ! நீங்க இப்போ சொன்னதை மட்டும் நிறைவேத்துங்க- நு சொல்லுவோம் மாப்ள" நு சொல்லும் போது பாதி பேருக்கு நான் kerchief குடுக்க வேண்டியதா போச்சு ! அந்த அளவுக்கு ஒரு emotions + பீலிங்க்ஸ் ! 

இது தான் lesson # 2
சரி , ஒரு வேளை வீட்ல நம்மள ரொம்ப force  பண்ணுவாங்களோநு நெனைச்சேன்  !


யாரோ ஒரு நலன் விரும்பி to  my  அப்பா : என்னங்க , எப்போ பையனுக்கு கல்யாணம்?

என் அப்பா : அய்யய்யோ, பெண் பாவம் பொல்லாததுங்க ! தெரிஞ்சே ஒரு பொண்ணு வாழ்கைய பாழாக்க  என் மனசாட்சி ஒத்து உழைக்கல !

இப்படி ஒரு producer  இருக்கிற வரைக்கும் ஒரு short பிலிம் கூட எடுக்க முடியாது நு ரொம்ப strong-a புரிஞ்சி போச்சு !

ஒரு வேளை , arranged marriage -நா தான் இப்டி எல்லாம் இருக்கும் போல, love marriage பண்ணோம்-ந இந்த பிரச்சனை எல்லாம் இல்லாம life smooth -அ இருக்கும் நு ஒரு முடிவுக்கு வந்தேன்



Me to my friend: மச்சி, ரொம்ப strong -அ decide  பண்ணிட்டேன் டா ! பண்ணா love பண்ணி தான் கல்யாணம் பண்ணிக்கணும் நு முடிவு பண்ணிட்டேன் !

நல் உள்ளம் கொண்ட நண்பன் : அப்போ, கல்யாணம் பண்ணிக்கிற idea-ve இல்ல நு சொல்லு !


தம்பி படத்துல வர்ற மாதவன் மாதிரி ஹை pitchu -ல  "இப்போ நான் என்ன செய்ய ?" - நு பஞ்ச் டயலாக் மட்டும் தான் பேச முடியும் நு புரிஞ்சி கிட்டேன் ! 





Monday, March 5, 2012

700 ஆண்களுக்கு நடுவே சிக்கி தவித்த இளம்பெண்!

Date & Time : Sometime during the golden days in Crescent Hostel.


என் காலேஜ்-அ பத்தி அதிகம் தெரியாதவங்களுக்கு ஒரே ஒரு வரியில அறிமுகம்  : வண்டலூர் zoo - க்கு அப்டியே பக்கத்துல ! 

இதுக்காக நான் காலேஜ் சேர்ந்த உடனே " உன் friends- இருக்கிற இடத்துக்கே போயிட்டியா?" - நு மொக்க காமெடி பண்ணவன் எச்சகச்சம் ! :) 

வழக்கம் போல எந்த வெட்டி வேலையும் இல்லாம சாயுங்காலம் ஒரு 7  மணிக்கு ஒரு நியூஸ் !

"மாப்ள ! கொஞ்சம் தூரம் தள்ளி இருக்கிற   septic tank-la முதலை இருக்கிறத நம்ம மோட்டார் operator பார்தானம் டா!" - நு ஒருத்தன் வந்து சொன்னான்.

நாம தான் வதந்திய கேட்ட உடனே கந்து வட்டிக்கு கடன் வாங்கிட்டு போயாவது ஸ்பாட்-கு போயிடுவோமே! 

போயி அங்கே ரொம்ப நேரம் நின்னு பார்த்தோம் ! Fire engine ஆபீஸ்-ல இருந்து suction பம்ப் எல்லாம் போட்டு வெளிய எடுத்து பார்த்தப்ப ஒரு குட்டி முதல உள்ள இருந்தது! - அது எப்படி வந்தது, ஏன் வந்தது-ங்கிரத எல்லாம் "குற்றம் - நடந்தது என்ன?"-ல கோபிநாத் கோட்டு சூட்டு எல்லாம் போட்டுகினு வந்து செம modulation -ல  சொல்லுவாரு!  வனத்துறை அதிகாரிகள் அத அப்டியே  கேட்ச் பண்ணி கொண்டு போயிட்டாங்க! - இது தாங்க நடந்தது!


மறு நாள், காலையில newspaper படிக்கலாம் நு எடுக்கிறேன்!

மூணாவது பக்கத்தில ஒரு செய்தி :

"700 ஆண்களுக்கு நடுவே சிக்கி தவித்த இளம்பெண்! - போலீசார் வந்து போராடி மீட்டனர்"  - 


செமையா இருக்கே news அப்படினு படிக்க ஆரம்பிச்சேன். அது என்னடா நியூஸ் -நு படிச்சா exactly the முதலை நியூஸ். 
ஒரே ஒரு கேட்ச். Capture  ஆனா முதலை, பெண் முதலையாமாம் !  
பாய்ஸ் hostel  total strength ஒரு 700  இருக்கும். எப்படியெல்லாம் கோர்த்து இப்படி ஒரு டைட்டில் !

அட்ரா சக்க! அட்ரா சக்க! - நு சொல்லிட்டு "என்ன ஒரு விளம்பர யுக்தி" - நு நெனைச்சிக்கிட்டேன் ! இப்படி தான் நாட்டுல பாதி நியூஸ் ஓடி கிட்டு இருக்கு! 

மீடியா அரசியல்-ல எவ்ளோ பெரிய ரோல் ப்ளே பண்ணுது-நு தெரிஞ்சிக்க சுஜாதா அவர்கள் எழுதிய "பதவிக்காக"-ங்கிற extra-ordinarily fantastic book-அ படிக்கலாம் !

வைரமுத்து  அவர்களின் தமிழுக்கு நிறம் உண்டு" -என்கிற புத்தகத்தில்  "பத்திரிக்கை சுதந்திரம்" என்ற தலைப்பில்  ஒரு சின்ன வாசகம் நினைவுக்கு வருகிறது !
 
"நடிகை வீட்டில் இருக்கும்
நான்கு நாய்களில் மூன்று நாய்கள் கர்ப்பம் 
என முன்னணி   செய்தி தாளில் செய்தி வந்தது! 
விசாரித்து பார்த்ததில் தான் தெரிந்தது அவை 
அனைத்துமே ஆண் நாய்கள் என்று !"





Saturday, March 3, 2012

Dialogues/ Lyrics - 1

நான் ரசித்த சில  டயலாக்ஸ் / லிரிக்ஸ்:

இதயம் படத்தோட ஆடியோ மட்டும் ரேடியோ-ல ஓடி கிட்டு இருந்தது.


ஒரு சில டயலாக்ஸ் மிக மிக அருமையாக இருந்தது. மறந்து விட கூடாது என்பதற்காக அப்போவே எழுதி வைத்தேன்.


அவற்றில் சில,


1 . "உனக்கென்ன தீப்பொறி பார்வை வீசிச் சென்று விட்டாய்.
மூங்கில் காடாய் எறிவது நான் தானே!"


௨. இதயத்தில் இடி, அதனால் கண்ணில் மழை !


3 கரும்பாய் இனிக்கும் பெண்களின் இதயம் மட்டும் இரும்பாய் அமைந்தது ஏன்?


அதே போல், சிகரம் படத்தில் வரும் "அகரம் இப்போ சிகரம் ஆச்சு"- ங்கிற பாடலில்


"எறும்புக்கும் வாழ்க்கை உள்ளது" - நு ஒரு வரி




"குட்டி பூவே .. நான் தொட்டால் துலங்கும் தொடலாமா" - என்கிற பாடலில் ஒரு வரி-


"கடலில் கலந்த பின் அட என் பேர் நதி இல்லை"

Friday, March 2, 2012

First Soldier


Euphemism ! - Please read the meaning of this word, if you have not heard of it before.

Year : 2005
Location : Charles Nagar, Pudukkottai. - One of my close friend - Mr. P.Karthik's bungalow.

10 of our gang members went on a tour to all the other friends' homes during 6th semester holidays to Trichy, Pudukkottai & Aranthangi. It is one of the very memorable and cherishable trips for us.

Movie named "First Knight"("Knight" means "Soldier") was telecasted in the TV then. All our friends were watching the movie. Suddenly, Karthik's father came to hall .

Karthik's dad : என்னப்பா படம் இது ? படம் பேரு என்ன?

I sensed, since 'k' is pronounced silent in "knight", I will have to tell him as "First night", which I thought might sound odd since some of the family members were around. Applying the theory of euphemism,

Me :  அப்பா ,  படம் பேரு -  First soldier (உள்ளுக்குள்ள ஒரே பூரிப்பு, என்ன ஒரு புத்திசாலித்தனம்! ராஜா தந்திரங்களை கரைத்து குடித்து இருக்கிறாயடா நீ! - நு I congratulated myself)


Karthik's dad :  Ok . Continue.

Suddenly, Mahatma Gandhiji's great grand nephew Power Star Dr.Srinivasan a.k.a Panda of our gang told

Srini : "Hey First solider illa da. படம் பேரு -  FIRST நைட்".

அந்த நேரம் பார்த்து  திடீர்னு action படத்துல ஒரு romance scene !

கார்த்தி அப்பா எங்களை எல்லாம் கேவலமா ஒரு லுக் விட்டாரு. அதுக்கான அர்த்தம் "இந்த மாதிரி friends- எல்லாம் கூட இருந்தா எப்படி என் பையன் உருப்படுவான் ?".


நான் எவ்ளோ க(கு)ஷ்டபட்டு  அதை சமாளிச்சேன். இவனுங்கள எல்லாம் கூட வச்சி கிட்டு ஒரு கொலை கூட உருப்படியா பண்ண முடியாது!


Wednesday, February 29, 2012

கணம் கோர்ட்டார் அவர்களே

Year :  1987,
Location : Oru Bank, Trichy

While Mr.Citizen handed over the cash worth Rs.10,000 in the denominations of 100s, 67/100 notes were found to be fake. Sensing the situation right, Cashier Mr.Ramakrishnan(My friend's dad) alerted the security guards and handed over Mr.Citizen to police.

Rotating the mosquito coil in anti-clock wise direction...

Year : 2003,
Location : Trichy bench court.

Mr.Citizen is now the சதுர வட்ட செயலாளர் in one of the தமிழகத்தை வாழ(?) வைக்கும் கட்சி.  He is guarded by at least 10-15 alla kais with 4-5 lawyers. They have threatened my friend's dad not to appear in the court. My friend's father, being a honest person, didn't wish to boycott it.

Enquiry :

Government Lawyer : நீங்கள் தான் ராமகிருஷ்ணன் என்பவரா ?
My friend's dad : ஆமாம் .

Government Lawyer :  1987-ஆம்  ஆண்டு  Oru Bank-il நீங்கள் cashier-ஆக  பணி புரிந்தீர்களா ?
My friend's dad : ஆமாம்.

Government Lawyer :  அப்போது ,  இதோ இங்கே  இருக்கும் Mr.Citizen  கொடுத்த  100 , Rs.100 நோட்டுகளில்  67 கள்ள நோட்டுக்கள்  இருந்தனவா ?

My friend's dad : ஆமாம்.


Mr.Citizen's lawyer : இதை நேரில் பார்த்த சாட்சிகள் ஏதேனும் உண்டா ?


My friend's dad : என்னோட  bank manager தான் சாட்சி


Mr.Citizen's lawyer : Your honour, Mr.மேனேஜர் இப்பொழுது அமெரிக்காவில் உள்ளார்.(He is around 75 now) . அவர் இந்தியாவிற்கு அடுத்த ஆண்டு தான் வருகிறார் என்பது குறிப்பிடதக்கது .  As he is suffering from USA Visa, Please give me the "வாயிதா " for 6 months till he returns.


Judge : Since Mr.Manager is the crucial witness for this case, your  "வாயிதா " is Granted buddy! Cheers!


The case is still going on and it will go on ..... Although I have added some fun elements to the above statements, no much deviations to it and it is somewhere between 90-92% true

2 months back, When I read that ISI has made  Rs.1 lakh crore (Still less than Spectrum scandal's amount) equivalent fake indian currencies in the market to succumb the value and its credibility, I sensed what sort of destructive role is being played a fake currency. அந்த தப்பு தான் இப்போ நம்ம Mr.Citizen செஞ்சி இருக்காரு. The case has been going on for more than 25 years with only 1 session of enquiry . ISI-a  ஒன்னும் பண்ண மாட்டீங்க, பண்ண முடியாது. You will lose a specific vote bank for the same reason, why Mr.Ajmal Kasab is being pampered with Rs.12 crore/year without execution of the punishment. But, here, you have solid witnesses, you have ample proof. But, still the case is dangling for more than 25 years. Do we see any light here ? Certainly no.


சட்டங்கள் கடுமை ஆனால் தான் குற்றங்களும் குறையும்!


A simple citation :


In Singapore, usage of bubble gums is banned since it deters maintaining the city clean since some they were sticked on the park benches. Also, the suction vaccum cleaners doesn't function efficiently when bubble gums get in. Besides, laser sensors used in metro train doors was TWICE (only twice) hindered by some mischievous citizens who sticked the bubble gum over the sensors. Citing this, bubble gums were banned very effectively. There was a huge foreign investment in bubble gum industry in Singapore by Wrigleys and other major brands. They never cared for a moment with regards to that .  More details can be found here http://en.wikipedia.org/wiki/Chewing_gum_ban_in_Singapore . This is how a responsible Government / legal  system should conduct its citizens for the welfare and development of the society.


There are only two kind of people who can handle this effectively

1. Wood judgement (கட்டபஞ்சாயத்து )  -  Many prominent figures

2. Gandhian Way - Person 1 , Person 2 

Monday, February 27, 2012

Bride Search

Bride search scenario represented as SQL statements. Might not appeal non-IT guys!

Compare every statement with the previous age's statement.

Age 26 :

select * from profiles where
gender = 'FEMALE' and
financial_status = 'RICH' and
complexion = 'FAIR/VERY FAIR' and
education = 'Minimum GRADUATE/POST GRADUATE' and
occupation = 'WORKING '
religion = 'K'
caste = 'X' and subcaste = 'Y'



Age 27 :

select * from profiles where
gender = 'FEMALE' and
financial_status = 'RICH' and
complexion = 'FAIR/WHEATISH' and
education = 'GRADUATE/POST GRADUATE' and
occupation = 'WORKING '
religion = 'K'



Age 28 :

select * from profiles where
gender = 'FEMALE' and
financial_status = 'MEDIOCRE' and
complexion = 'WHEATISH/DARK' and
education = 'STARTING FROM 10TH standard' and
occupation = 'NOT SO PARTICULAR'
religion = 'I DONT BELIEVE IN RELIGION,CASTE & CREED'





Age 29 :

select * from profiles where
gender = 'FEMALE' and
financial_status = 'NO PREFERENCE' and
complexion = 'I BELIEVE BEAUTY IS SKIN DEEP'




Age 30 :

select * from profiles where gender = 'FEMALE'

 
Age 30+:

select * from profiles where gender LIKE 'FEMALE'
 

Friday, February 17, 2012

My dressing sense!

As most of you know well about me and my dressing sense and appearance, no further introduction is required for that. College friends acknowledge me well with my highly/moderately wrinkled orange/yellow shirt every other day for all the 4 years.

2 incidents that describe my dressing sense at its best.

Incident 1 :

Every friend of mine who has met my dad will say one thing for sure. "nee apdiye unga appavukku opposite". Yes, he is a man nearing 60 and known for wearing Ray ban glasses(even after 8pm :) ) , Rado watch with a perfect white & white all the times appearing all the time with a cleanly shaved face and a perfect hair style which he never allows to turn grey. His aim is to look younger than my mom. My father & I standing next to each other will resemble a benz car & a second hand bajaj scooter

Year : 2004
Location : Sree Krishna Collections, Chennai.
Characters : Me and my producer(enga appa than)

He was looking for clothes for me with new designs and patterns in various materials. He showed me a few designs and I was looking at the price tags only without seeing the size/material/color. He was frustrated and asked me just to walk beside him and not to look at what he is selecting and what he is paying for. I felt that is the best choice too. I was gazing at the various clothes here and there. Suddenly, a mylapore ambujam mami  walked in and told

"Dei Thambi, andha 3rd shelf-la irukkira thuni ellam konjam eduthu podu da!".

Appa's reaction :  He walked very fast and moved to the next bay in the shop so that no one senses that we are related in any way. I walked very fast toward him and he told  "Kai eduthu kumbidraen. Dhayavu senji poyi veliya wait pannu. Indha 10Rs., veliya poyi cheap-a enga tea kedaikkum nu parthu kudichi kittu iru. Naan varraen". I walked away happily with 10Rs. But, tea was highly expensive @ Rs.4.50 over there. So, adha saving panni thiruppi kuduthuttaen.


Incident 2 :

Year : 2007
Location : Gudiyattam Railway Station
Characters : Me and Udan poruppu(My sister)

My sister was working in Chennai then and my dad asked me pick her up @ railway station on a fine friday evening. I parked my bike in the stand and was waiting for my sister to come. When the train arrived and I saw my sister coming and noticing that she hadn't noticed me , I sneaked in the crowd and went near her and asked her

"Madam, Auto Venuma?"

My sister looked at me and just smiled and was about to hand over the luggage to me(as she always employs me a porter for her luggages), appo  crowd-la irundhu dog voice from a Nita Ambani madam,

Nita Ambani Madam : "25Rs. than tharuvaen. Indha pudi en luggage-a". 

My sister : "Naan 50Rs. tharraen. Nee pudi pa en luggage-a".

Me: (Thinking of Gandhiji in  my mind and lookin at the vaanam) Sathya Sodhanai

Took my sister's luggage and headed fast towards the bike stand.

Kooda porandha akka kooda enna madhikkala. Gandhiya-ey sutta Naadu idhu. Idhula naan mattum enna vidhi vilakka?