Friday, February 8, 2013

A brilliant 10th Standard Doctor

Year :2005
Location : Lifeline hospital, Chennai

Hostel  Dividing system-ல  அடுத்தவன் காசுல அளவுக்கு அதிகமா சாப்பிட்டனதால ,  அனைவரின் ஆசியுடன் Appendicitis operation இனிதே நடந்தேறியது.

Hospital -ல  நான், என் அப்பா, எல்லா  nurse -கூடயும்  கடலை போடுறதுக்கு  அருண்,  லேடி டாக்டர் கிட்ட மட்டும் பேசுறதுக்கு  கார்த்தி !

ஒரு nurse வந்தாங்க ! உடனே அருண் attend பண்ணினான் ! after ஆபரேஷன், வயிறு light-ஆ  pain  இருந்துட்டே இருந்தது. ஒரு மாதிரி  bulge  ஆன  மாதிரி இருந்துச்சு.

அருண் : Yes  மேடம், how may i help?

Nurse to me :  சார், operation முடிஞ்சி 4 hours ஆகுது ! Atleast once , piss பண்ணிட  சொல்லுங்க. அப்போ தான் கொஞ்சம் relief  ஆ இருக்கும். But , one கண்டிஷன், யாரையாவது கூட support-கு நிக்க சொல்லுங்க. ஏன்னா , கொஞ்சம் dizzy-ஆ ஆகிடும்.

அருண் : நோ problem மேடம் ! (pointing  me)அந்த body-அ  நாங்க  பார்த்துக்குறோம். உங்க வீடு எங்க இருக்கு ?

வழக்கம் போல அந்த nurse கண்டுக்கல. அசிங்கப்பட்டான்  அருண்குமார் !

அப்பா  சொன்னார் "போயிட்டு  வந்துடுபா ! அப்போ தான் relief ஆ  இருக்கும்."

 I went டு toilet. நோ success.(என்ன டா ? IAS exam-ஆ எழுத போன ? உச்சா  போக தானே டா  போன? இதுக்கு ஒரு success , failure  statement  ஆ ?)

Nurse came again and  asked "என்ன ? போயிட்டு வந்துட்டீங்களா ?" னு  thumbs up விளம்பரம் மாதிரி கைய வச்சி கிட்டு கேட்டாங்க.

அருண் : thumbs down - symbol  காமிச்சி - "இன்னும் இல்லீங்க ! வேற  என்ன பண்ணலாம் நு நீங்க suggest பண்றீங்க ?"

அப்போ அந்த nurse ஒரு ஐடியா குடுத்தாங்க. இத யாரவது embarrassing-ஆ feel பண்ணினா "I am really sorry".

Toilet-ல bucket -அ  move  பண்ணிட்டு , tap திறந்து விட்ருங்க . அந்த சத்தம் கேட்டாலே automatic-ஆ output வந்துடும். (இது என்ன COBOL ப்ரோக்ராம் ஆ ? Output -அ  கொண்டு வர்றதுக்கு ?)


போர்களத்திற்கு மீண்டும் சென்றேன். தோல்வியைத் தழுவி மீண்டும் returned to the pavilion.

பாட்ஷா படத்துல, ரஜினி ஆட்டோவை கிழிக்கும் போது , "வேண்டாம்" நு ஜனகராஜ், மத்த rowdy boys எல்லாம் தலை ஆட்டர மாதிரி reaction குடுத்து கிட்டே வெளிய வந்தேன்.

Nurse came again and  asked "என்ன ? Success ஆ ?"

எல்லாருக்கும் முன்னாடி அருண் replied  "Not yet. குழாய் வைத்தியம் வேலை செய்யல. வேற எதாவது வைத்தியம் சொல்லுங்க "

Nurse replied  "அய்யயோ , அப்டி இல்லைனா , pain அதிகம் ஆகிடும். போயிட்டு வந்துடுங்க"

எல்லா கடவுளையும்  வேண்டிகிட்டு திரும்ப  ரொம்ப try பண்ணினேன்.  வண்டி self எடுக்கல.

அப்போ , அங்க இருந்த ஒரு சீனியர் doctor ரொம்ப confident-ஆ  சொன்னாரு "இதெல்லாம் nothing to worry. All  due  to  stress. ஒரு tube போட்டு சின்னதா ஒரு injection கொடுத்தா simple -ஆ release ஆகிடும். ஒரு Rs.20,000 ஆகும் " நு சொன்னாரு.

Me : எவ்ளோ  சார் ??????

Doctor  : Rs. 20,000 rough -ஆ ஆகும்.

"சொல்லுங்க  சொல்லுங்க சொல்லுங்க !!! Bombay -ல , Bombay -ல , Bombay -ல , Bombay -ல "- நு ஒரு Locked room ல ரஜினிக்கு பாட்ஷா படத்துல கேக்குற மாதிரி எனக்கு  "எவ்ளோ  சார் ?, எவ்ளோ  சார் ? எவ்ளோ  சார் ? Rs. 20,000 rough Rs. 20,000 rough Rs. 20,000 rough" னு  கேட்டு  கிட்டே இருந்துச்சு.

"One  second sir" - நு சொல்லிட்டு I went again to toilet with full thrust. "He came, He saw, He conquered" மாதிரி successful -ஆ work -அ complete  பண்ணிட்டு வந்தேன். செம sense  of  relief.

"Yes , Yes  and  Yes " நு air-ல ஒரு punch vittutu வெளிய நான் வந்தத பார்த்துட்டு இருந்த அந்த doctor, என் friends கிட்ட ஏதோ சொல்ல, எல்லாரும் சிரிச்சாங்க.


அந்த டாக்டர் சொன்னாரு "அந்த Nurse எவ்ளோ டிப்ஸ் & tricks  சொன்னங்க ?? ஏதாவது work  out  ஆச்சா?. இவன் ஒரு வடி கட்டுன கஞ்ச பய நு தெரிஞ்சி கிட்டு  ஒரு Rs.20000 செலவு ஆகும் நு சும்மா இல்லாத treatment-அ சொன்னேன். அது எப்டி work  அவுட் ஆச்சு பார்த்தீங்க இல்ல?"

ஒரு சின்ன குழந்தையோட(நான் தான் the me  )  weakness-அ எல்லாருமா சேர்ந்து எப்டி exploit  பண்றாங்க நு பாருங்க மக்களே !

என்னை அசிங்கபடுத்தி output வாங்கின அந்த டாக்டர் வேற யாரும் இல்ல!  எங்க அப்பா  தான் ! அப்பா னா,  தவமாய் தவமிருந்து படத்துல வர்ற ராஜ் கிரண் மாதிரி சைக்கிள்-ல என்னை வச்சி ஓட்டனும். இப்படி கேலி கிண்டல் பண்ணி எல்லார் முன்னாடியும் ஓட்ட கூடாது .