Thursday, February 12, 2015

அர்விந்த் கேஜ்ரிவால் ஐ - படத்தில் வரும் 'மெர்சல் ஆயிட்டேன்' பாட்டை பாடினால்.....

அர்விந்த் கேஜ்ரிவால் ஐ - படத்தில் வரும் 'மெர்சல் ஆயிட்டேன்' பாட்டை பாடினால்.....

மொத தபா பாத்தேன் உன்ன (Delhi  Assembly-ஐ நோக்கி )
பேஜாராயி போயி நின்னேன் நின்னேன்
((((கிஷ்ணாயிலு ஊத்தாம பத்தவச்சியே
கொழா தண்ணி என்னை)))))Majority இல்லாம நிக்க வச்சியே
புது கட்சி என்னை
நான் மிரசலாயிட்டேன் மிரசலாயிட்டேன் மிரசலாயிட்டேன்
மிரசலாயிட்டேன் மிரசலாயிட்டேன்


((((ஏ தோசக்கல்லு மேல் வெள்ள ஆம்லெட்டா
ஒரு குட்டி நிலா நெஞ்சுக்குள்ளே குந்திக்கிட்டாளே))))
ஏ Lokpal மேல் ஆச வச்சி தான் 
ஜந்தர் மந்தர் தர்பாரில குந்தி கிட்டேனே!

((((வானவில்லு நீ பின்னி மில்லு நான்
என்னை ஏழு கலர் லுங்கியாக மடிச்சுபுட்டாளே))))
ஆம் ஆத்மி நான்; சாதா மனுஷன் தான்;
கேஜ்ரிவால்- இப்போ china wall-ஆ ஆகி நின்னேனே !

((((மாட்டுக்கொம்பு மேலே அவ பட்டாம்பூச்சி போல)))
விளக்குமாறு மேலே பட்டுக்குஞ்சம் போல
நான் மிரசலாயிட்டேன் நான் மிரசலாயிட்டேன் நான் மிரசலாயிட்டேன்

Muffler கட்டி தான் சுத்தி திரிஞ்சேனே!
மோடி-யோட suit-க்கு தான் சூட்டை வச்சாயே!

((((நீ வெண்ணிலா மூட்ட இவ வண்ணாரபேட்ட))))
நீ congress-ஓட கோட்டை; அத  ஆடிட்டோமே வேட்டை!!



Additional:
49 days விரதம் வச்சேனே!
பலனா இப்போ AK-67 ஆகிபுட்டேனே!

நான் மிரசலாயிட்டேன் மிரசலாயிட்டேன் மிரசலாயிட்டேன்
மிரசலாயிட்டேன் மிரசலாயிட்டேன்



Wednesday, June 25, 2014

வைரமுத்து - Link-உம் தலைப்பிரசவமும்



சமீபத்தில் படித்த செய்தித்  தலைப்பு :

யுவன் சங்கர் ராஜாவும் வைரமுத்துவும் ஒரு படத்திற்காக இணைகிறார்கள் !

இது தொடர்பாக வைரமுத்து அவர்களிடம் கேட்கப் பட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில்.

இந்த வாய்ப்பு அமைந்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இது சாத்தியம் ஆனதற்கு  திரு. சீனு.ராமசாமி அவர்களும் திரு.லிங்குஸ்வாமி அவர்களும் தான் காரணம். மனிதர்களால் முடியாததை இந்த இரு "சாமி"கள்  செய்துள்ளார்கள். இது போன்ற நல்ல இணைப்புகளை உருவாக்குவார் என்று முன் கூட்டியே அறிந்து தான் லிங்குஸ்வாமி அவர்களின் பெற்றோர் அவருக்கு "Link"-உ-ஸ்வாமி என்று பெயர் வைத்து இருக்கிறார்கள். :)
------------------------------------------------------------------------------------------

 வைரமுத்து  அவர்கள், ஒரு அரசு அலுவலகத்தில் பணி புரிந்த சமயம்.

பாரதிராஜா அவர்களின் அலுவலகத்தில் இருந்து ஒரு படத்திற்கு பாடல் எழுதும் வாய்ப்புக்காக ஒரு அழைப்பு வருகிறது. அது தான் வைரமுத்து அவர்களக்கு வந்த முதல் திரைப்பட வாய்ப்பு. உடனே புறப்பட தயார் ஆகிறார்.

மறு கணமே,  வைரமுத்துவின் துணைவியார் பிரசவ வலி கொண்டு பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக இன்னொரு அழைப்பு வருகிறது.

மிகவும் எதிர்பார்த்த திரைப்பட வாய்ப்பு ஒரு புறம். மறுபுறம் - மனைவியின் முதல் பிரசவம். என்ன செய்வது என்று அறியாமல் இருந்தவரிடம் நண்பர் ஒருவர், தான் மருத்தவமனை சென்று பார்த்து கொள்வதாக சொல்லி வைரமுத்துவை பாரதிராஜாவிடம் போகச்  சொன்னார்.

இசைஞானி இளையராஜா மெட்டு அமைக்க உருவாகிறது அந்த வரிகள் -

"பொன் மாலைப் பொழுது... இது ஒரு பொன் மாலைப் பொழுது"

"பூமரங்கள்- சாமரங்கள் வீசாதோ??" என்ற வரிக்கு பாரதிராஜாவின் புருவங்கள் உயர்ந்தனவாம். இளையராஜா வரிகளைப் படித்து விட்டு மிகவும் பாராட்டி  - "இவரின் தொலைபேசி எண்ணை பத்திரமாக குறித்து வைத்து கொள்ளுங்கள்"
என்று சொல்லி விட்டு சென்றாராம்.

பாரதிராஜா மீண்டும் மீண்டும் அந்த வரிகளைப் படித்து "Excellent! Excellent!" என்று சொல்லி முன் பணம் தந்து அனுப்பி உள்ளார்.

மிகுந்த மகிழ்ச்சியுடன் மருத்தவமனை செல்கிறார். அங்கேயும் நற்செய்தி - "ஆண் குழந்தை பிறந்து உள்ளது".

பொன்மணி வைரமுத்து அவர்களின் கைகளைப் பற்றி சொல்கிறார்
- உன் பெயரின் முதல் பாதி(பொன்) தான் - திரைப்பட உலகில் என் ஆதி (பொன்மாலை). அது மட்டும் அல்ல பொன்மணி, யாருக்கும் இல்லாத பாக்கியம் - உனக்கும் எனக்கும் ஒரே  நாளில் தலைப் பிரசவம்."





Monday, August 12, 2013

திருத்தி எழுதிய தீர்ப்புகள்

கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின்
"திருத்தி  எழுதிய தீர்ப்புகள்"  புத்தகத்தில்  இருந்து மிகவும் பிடித்த வரிகளை தொகுத்து உள்ளேன்  !

அந்தி 

ராத்திரி வரப்போகும்
ராச குமாரிக்கு
மேற்கு அம்மியிலே
மஞ்சள் அரைப்பது யார்?

பாரதி 

அவன் அதிசயம் செய்தான்!
தமிழின்  அத்தனை எழுத்தையும்
ஆயுத எழுத்தாய் அல்லவா மாற்றினான் ?
ஆதிக்க வேரறுக்கும்
ஆயுத எழுத்தாய் ...

மகாத்மா 

அப்படியொன்றும் உன்னை
அடியோடு மறக்கவில்லை
அண்ணலே !
இன்னும்
நகரத்துப் பெண்களிடம்
நல்ல செல்வாக்கு இருக்கிறது !

உன்னைப் பின்பற்றி
அரையாடை கட்டுவது
அவர்கள்தாம் இப்போது!


நட்சத்திரங்கள் 

நிலவு என்னும்
ஒற்றை வாக்கியத்தை
எழுதி முடித்த
எக்காளத்தில்....
எவனவன்
இத்தனை முற்றுப்புள்ளிகள்
இட்டு வைத்தவன் ?

"இந்த பூக்களைப்
பறிக்காதீர்கள்"
என்று
நிலாப்பலகையில்
எழுதி வைத்த
எச்சரிக்கை எழுத்துக்கள்
மேகச் சிராய்ப்பில்
அழிந்து போயினவோ?

அப்படி
அழித்து அழித்தும்
அழியாத அழுக்கே
அந்தக்
களங்கமோ?

மன்னிப்பு பரிகாரமல்ல

நீதான் கர்த்தனே
நீ தான் !

பாவிகளை ரட்சிப்பதாய்
பாவத்திற்கு நீ தானே
பரிந்துரை செய்தாய் ?


இயற்கையோடு இயைந்த வாழ்வு 

பிறை நிலா.

மகன் கேட்டான் :

"ஏம்ப்பா நிலா
சூம்பிப் போச்சு ?"

தகப்பன் சிரித்தான் :

"அதுக்கும் நம்மைபோல்
மாசக் கடைசியோ
என்னவோ மகனே !"

இயற்கையோடு இயைந்த வாழ்வு
என்பது இதுதானோ ?
எந்தமிழர் சொன்னதும்
சரிதானோ ?


கணக்குப் பார்கையில் 

இந்திய மண்ணில் ,

வியாபாரம் செய்ய வந்தவர்கள்
அரசியல் நடத்தினார்கள் !

அரசியல் நடத்த வந்தவர்கள்
வியாபாரம் செய்கிறார்கள் !


ராத்திரி விழிக்கட்டும் 


சித்தத்தினால் 
          கொண்ட 
பித்தத்தினால் 
           கனவு
முத்தத்தினால் 
          வந்த  
சத்தத்தினால் 

     தூக்கம் கலைந்ததடி தோழி  - செத்த    
     சூரியன் உதிப்பதெந்த நாழி?


ஏக்கம் வரும் 
         நெஞ்சில் 
வீக்கம் வரும்  
          பருவ 
நோக்கம் வரும் 
          எங்கு 
தூக்கம் வரும் ?

       கரைந்தது கன்னத்து மச்சம் - நான் 
       கன்னியாய்  இருப்பதே மிச்சம் !

பேர் கேட்டது 
       காதல் 
வேர்விட்டது 
        என்னை 
ஊர்சுட்டது 
        சாபம்
யார் இட்டது ?

       என்றுதான் ஜாதி உயிர் போகும் - இன்னும் 
       எத்தனை வருஷங்கள்  ஆகும் ?


பூவைப்பதா 
      பிறகு 
தீவைப்பதா 
      மனசு 
தேன் வைப்பதா 
     இல்லை 
சீழ் வைப்பதா ?

         ஒருமுறை தாய் வந்து பார்த்தாள்  - மழைக்கு 
          ஒழுகுதோ வீடென்று கேட்டாள் !


சாதிப்படி 
     பெற்ற 
பாதிப்படி 
     காதல் 
நீதிப்படி 
     துன்பம் 
எதுக்கடி ?

      விடிந்தால் தீர்ந்து விடும் வழக்கு - எங்கே   
        வெளுக்கிறதோ பார் அந்தக் கிழக்கு !