Wednesday, June 25, 2014

வைரமுத்து - Link-உம் தலைப்பிரசவமும்



சமீபத்தில் படித்த செய்தித்  தலைப்பு :

யுவன் சங்கர் ராஜாவும் வைரமுத்துவும் ஒரு படத்திற்காக இணைகிறார்கள் !

இது தொடர்பாக வைரமுத்து அவர்களிடம் கேட்கப் பட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில்.

இந்த வாய்ப்பு அமைந்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இது சாத்தியம் ஆனதற்கு  திரு. சீனு.ராமசாமி அவர்களும் திரு.லிங்குஸ்வாமி அவர்களும் தான் காரணம். மனிதர்களால் முடியாததை இந்த இரு "சாமி"கள்  செய்துள்ளார்கள். இது போன்ற நல்ல இணைப்புகளை உருவாக்குவார் என்று முன் கூட்டியே அறிந்து தான் லிங்குஸ்வாமி அவர்களின் பெற்றோர் அவருக்கு "Link"-உ-ஸ்வாமி என்று பெயர் வைத்து இருக்கிறார்கள். :)
------------------------------------------------------------------------------------------

 வைரமுத்து  அவர்கள், ஒரு அரசு அலுவலகத்தில் பணி புரிந்த சமயம்.

பாரதிராஜா அவர்களின் அலுவலகத்தில் இருந்து ஒரு படத்திற்கு பாடல் எழுதும் வாய்ப்புக்காக ஒரு அழைப்பு வருகிறது. அது தான் வைரமுத்து அவர்களக்கு வந்த முதல் திரைப்பட வாய்ப்பு. உடனே புறப்பட தயார் ஆகிறார்.

மறு கணமே,  வைரமுத்துவின் துணைவியார் பிரசவ வலி கொண்டு பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக இன்னொரு அழைப்பு வருகிறது.

மிகவும் எதிர்பார்த்த திரைப்பட வாய்ப்பு ஒரு புறம். மறுபுறம் - மனைவியின் முதல் பிரசவம். என்ன செய்வது என்று அறியாமல் இருந்தவரிடம் நண்பர் ஒருவர், தான் மருத்தவமனை சென்று பார்த்து கொள்வதாக சொல்லி வைரமுத்துவை பாரதிராஜாவிடம் போகச்  சொன்னார்.

இசைஞானி இளையராஜா மெட்டு அமைக்க உருவாகிறது அந்த வரிகள் -

"பொன் மாலைப் பொழுது... இது ஒரு பொன் மாலைப் பொழுது"

"பூமரங்கள்- சாமரங்கள் வீசாதோ??" என்ற வரிக்கு பாரதிராஜாவின் புருவங்கள் உயர்ந்தனவாம். இளையராஜா வரிகளைப் படித்து விட்டு மிகவும் பாராட்டி  - "இவரின் தொலைபேசி எண்ணை பத்திரமாக குறித்து வைத்து கொள்ளுங்கள்"
என்று சொல்லி விட்டு சென்றாராம்.

பாரதிராஜா மீண்டும் மீண்டும் அந்த வரிகளைப் படித்து "Excellent! Excellent!" என்று சொல்லி முன் பணம் தந்து அனுப்பி உள்ளார்.

மிகுந்த மகிழ்ச்சியுடன் மருத்தவமனை செல்கிறார். அங்கேயும் நற்செய்தி - "ஆண் குழந்தை பிறந்து உள்ளது".

பொன்மணி வைரமுத்து அவர்களின் கைகளைப் பற்றி சொல்கிறார்
- உன் பெயரின் முதல் பாதி(பொன்) தான் - திரைப்பட உலகில் என் ஆதி (பொன்மாலை). அது மட்டும் அல்ல பொன்மணி, யாருக்கும் இல்லாத பாக்கியம் - உனக்கும் எனக்கும் ஒரே  நாளில் தலைப் பிரசவம்."





Monday, August 12, 2013

திருத்தி எழுதிய தீர்ப்புகள்

கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின்
"திருத்தி  எழுதிய தீர்ப்புகள்"  புத்தகத்தில்  இருந்து மிகவும் பிடித்த வரிகளை தொகுத்து உள்ளேன்  !

அந்தி 

ராத்திரி வரப்போகும்
ராச குமாரிக்கு
மேற்கு அம்மியிலே
மஞ்சள் அரைப்பது யார்?

பாரதி 

அவன் அதிசயம் செய்தான்!
தமிழின்  அத்தனை எழுத்தையும்
ஆயுத எழுத்தாய் அல்லவா மாற்றினான் ?
ஆதிக்க வேரறுக்கும்
ஆயுத எழுத்தாய் ...

மகாத்மா 

அப்படியொன்றும் உன்னை
அடியோடு மறக்கவில்லை
அண்ணலே !
இன்னும்
நகரத்துப் பெண்களிடம்
நல்ல செல்வாக்கு இருக்கிறது !

உன்னைப் பின்பற்றி
அரையாடை கட்டுவது
அவர்கள்தாம் இப்போது!


நட்சத்திரங்கள் 

நிலவு என்னும்
ஒற்றை வாக்கியத்தை
எழுதி முடித்த
எக்காளத்தில்....
எவனவன்
இத்தனை முற்றுப்புள்ளிகள்
இட்டு வைத்தவன் ?

"இந்த பூக்களைப்
பறிக்காதீர்கள்"
என்று
நிலாப்பலகையில்
எழுதி வைத்த
எச்சரிக்கை எழுத்துக்கள்
மேகச் சிராய்ப்பில்
அழிந்து போயினவோ?

அப்படி
அழித்து அழித்தும்
அழியாத அழுக்கே
அந்தக்
களங்கமோ?

மன்னிப்பு பரிகாரமல்ல

நீதான் கர்த்தனே
நீ தான் !

பாவிகளை ரட்சிப்பதாய்
பாவத்திற்கு நீ தானே
பரிந்துரை செய்தாய் ?


இயற்கையோடு இயைந்த வாழ்வு 

பிறை நிலா.

மகன் கேட்டான் :

"ஏம்ப்பா நிலா
சூம்பிப் போச்சு ?"

தகப்பன் சிரித்தான் :

"அதுக்கும் நம்மைபோல்
மாசக் கடைசியோ
என்னவோ மகனே !"

இயற்கையோடு இயைந்த வாழ்வு
என்பது இதுதானோ ?
எந்தமிழர் சொன்னதும்
சரிதானோ ?


கணக்குப் பார்கையில் 

இந்திய மண்ணில் ,

வியாபாரம் செய்ய வந்தவர்கள்
அரசியல் நடத்தினார்கள் !

அரசியல் நடத்த வந்தவர்கள்
வியாபாரம் செய்கிறார்கள் !


ராத்திரி விழிக்கட்டும் 


சித்தத்தினால் 
          கொண்ட 
பித்தத்தினால் 
           கனவு
முத்தத்தினால் 
          வந்த  
சத்தத்தினால் 

     தூக்கம் கலைந்ததடி தோழி  - செத்த    
     சூரியன் உதிப்பதெந்த நாழி?


ஏக்கம் வரும் 
         நெஞ்சில் 
வீக்கம் வரும்  
          பருவ 
நோக்கம் வரும் 
          எங்கு 
தூக்கம் வரும் ?

       கரைந்தது கன்னத்து மச்சம் - நான் 
       கன்னியாய்  இருப்பதே மிச்சம் !

பேர் கேட்டது 
       காதல் 
வேர்விட்டது 
        என்னை 
ஊர்சுட்டது 
        சாபம்
யார் இட்டது ?

       என்றுதான் ஜாதி உயிர் போகும் - இன்னும் 
       எத்தனை வருஷங்கள்  ஆகும் ?


பூவைப்பதா 
      பிறகு 
தீவைப்பதா 
      மனசு 
தேன் வைப்பதா 
     இல்லை 
சீழ் வைப்பதா ?

         ஒருமுறை தாய் வந்து பார்த்தாள்  - மழைக்கு 
          ஒழுகுதோ வீடென்று கேட்டாள் !


சாதிப்படி 
     பெற்ற 
பாதிப்படி 
     காதல் 
நீதிப்படி 
     துன்பம் 
எதுக்கடி ?

      விடிந்தால் தீர்ந்து விடும் வழக்கு - எங்கே   
        வெளுக்கிறதோ பார் அந்தக் கிழக்கு !









Thursday, June 13, 2013

வஞ்சத்தில் வீழ்ந்தாயடா !

இப்படி ஆரம்பிப்போம் !

2nd year படிக்கும் (???) போது, எங்க class-ல ஒரு பெரிய அதிரடி  gang  form ஆச்சு .

அந்த சங்கத்தோட பேரு - VVS -BBB

vvs - வருத்தப்படாத வாலிபர் சங்கம்
BBB - Back bench boys.

பேரே இவ்ளோ கேவலமா இருக்கு-னு பார்த்தா , அந்த சங்கத்தோட members அத விட கேவலமானவங்க !

முரளி , சுமன் , பத்து, வேணு , ஸ்ரீராம் + நான் !!!

அந்த சங்கத்தோட speciality என்னன்னா - என்னை தவிர மீதி எல்லாருக்கும் ஒரு பதவி. நான் மட்டும்  தான் உறுப்பினர்.

"இன்னிக்கி இருந்து நம்ம அடாவடி பண்றோம் மச்சி ! எல்லா professor, class பொன்னுங்க எல்லாரயும் செம ஓட்டு ஓட்டுறோம் ! இது நம்ம வச்சி இருக்கிற arrear மேல சத்தியம் "  - அப்டின்னு உறுதி மொழி எடுத்தோம்.

Monday  morning. first  period.

ஏதோ ஒரு subject. term டெஸ்ட் paper  correction பண்ணி குடுத்து எங்க சங்கத்த அசிங்க படுத்தினாங்க.

அந்த lecturer சும்மா இல்லாம, first mark வாங்கின பொன்-ஐ கூப்பிட்டு அந்த டெஸ்ட்-ல கேட்டு இருந்த sum -அ board-ல  solve பண்ண சொன்னாங்க .

சங்கம் கூடுச்சு.

"இப்ப அந்த பொன்ன கலாய்கிறோம் மச்சி ! "

"என்ன பண்ணலாம்"

ஏகப்பட்ட ideas. கடைசியா ஒரு முடிவுக்கு வந்தோம்.

சங்கத்தோட தலைவர் சொன்னார் - "செம்மையா கை தட்டி அசிங்கப்படுதுவோம்"

"super மச்சி. பின்றோம் "
(எவ்ளோ ஒரு கேவலமான  முடிவு. இதுக்கு பேரு அசிங்க படுத்துருதது வேற ? இதுக்கு பேரு கலாய்கிறது வேற? )

sum , board -ல solve ஆகி கிட்டு இருந்துச்சு.

சங்கம் , ஒரு பக்கம் "துடிக்குது புஜம், ஜெய்ப்பது நிஜம் " நு கைய்ய clap பண்ற position -ல வச்சி இருக்கு.

"ஓகே team . shoot " - அப்டின்னு ஒரு command.

நான் full tempo -ல கை தட்டி கிட்டு இருக்கேன் . ஆனா , சத்தம் பெருசா கேக்கல.

என்ன-நு பார்த்தா ,
.
.
.
.
.
.
.
.
.

.
.
.
.
.
.
.
.

.
.
.
.
.
நான் மட்டும் தான் கை தட்டி இருக்கேன்.

மத்த உறுப்பினர்கள் எல்லாம் , கைய்ய, தட்டுற position -ல இருந்து எடுத்துட்டு , ஒரு மாதிரி என்னை பார்த்து "என்ன மச்சி , இப்போ எதுக்கு கை தட்டின ? ஒரு படிக்கிற பையன் மாதிரி behave பண்ணுடா " நு வேற சொன்னானுங்க.

இது ஒரு பக்கம் -னா , இன்னொரு பக்கம் , lecturer -கு அருள் வந்துடுச்சு .

"who clapped ? who clapped ?" நு ஒரே சத்தம்.

Gang members, நான் approver ஆகணும் நு எதிர்பார்த்தாங்க.

எனக்கு என்ன பண்றதுநு புரியல. Lecturer -கு அருள் உச்சகட்டத்தை அடைஞ்சிருச்சி .

"இப்போ யாரு கை தட்டினது நு சொல்லலனா , this will be my last class in this semester."-நு செம்மயா சொல்லி கிட்டு இருக்காங்க.

"அது தானே எங்களுக்கு வேணும் "  நு வேற சங்கத்தில இருந்து ஒரு voice போயி , சிக்கலுக்கு விக்கல் வர்ற மாதிரி பண்ணிட்டாங்க .

அவ்ளோ தான், ஆத்தா ஏறி-fied  the மலை. class -அ விட்டு செம வேகமா வெளிய போயிட்டாங்க. Bell வேற அடிச்சிருச்சி .

சங்கம் சந்தோஷத்துல துள்ளி குதிக்குது.

எனக்கு இன்னும் கொஞ்ச விட்டா floor wet ஆகுற அளவுக்கு பயம்.  "டேய் . என்னடா பண்றது ?" - நு கேட்டேன்.

"என்ன பண்ணனும்? bell அடிச்சிருச்சி . lecturer வெளிய போயிட்டாங்க. பின்ன, class -கு உள்ளையேவா இருப்பாங்க ?" - சொல்லி , சங்கம் ஒருத்தனுக்கு ஒருத்தன் hi -five குடுக்குது.

அவ்ளோ தான் , hutch dog மாதிரி , அந்த lecturer பின்னாடி ஓடினேன்.

அங்க போனா , அத விட பெரிய இடி.

அந்த lecturer , உயிரை குடுத்து இந்த பிரச்சினைய எங்க class advisor  கிட்ட சொல்லி கிட்டு இருக்காங்க.

"ரைட் டா. சனியன் full effect காமிக்கிது."னு நெனைச்சிகிட்டேன்.

திடீர்னு , என் class advisor,  "என்ன  விவேக் ? உங்க class mates எல்லாம் சும்மா இருக்க மாட்டாங்களா ? நீயாவது எடுத்து சொல்லலாம்ல ?".

நான் அப்டியே , சுச்சா பாப்பா மாதிரி மூஞ்ச மாத்தி கிட்டு நின்னு கிட்டு இருந்தேன். அருள் வந்த lecturer கிளம்பி போயிட்டாங்க

"வா. நம்ம class -கு போலாம் ! யாரு  என்னனு கேட்டு உண்டு இல்லை நு பண்ணிடறேன்"-னு சொல்லி எங்க class advisor வேகமா நடக்க ஆரம்பிச்சாங்க .

Me  to  me : "அய்யய்யோ ! இப்போ தானே நல்ல பையன் மாதிரி நடிச்சி கோல்டன் globe அவார்ட் எல்லாம் வாங்குனோம். அதுக்குள்ள வேஷம் கலையுதே"

"ma'm,, maa'm" அப்டின்னு கூப்பிட்டேன் .

"என்ன ?" அப்டின்னு பார்த்துட்டு , "ஓஹோ ! நீ தான் அந்த culprit -ஆ ?. இதுக்கு உன்னை வேற மத்தவங்களுக்கு அட்வைஸ் பண்ண சொன்னேன் பாரு . என்னை சொல்லணும். போ , அவங்க கிட்ட சாரி கேட்டுட்டு வா " னு சொல்லி அனுப்பிட்டாங்க.

Again , hutch dog mode.

ஒரு வழியா , அந்த தெய்வத்தை மலை இறங்க வைக்கறதுக்குள்ள நான் பட்ட பாடு இருக்கே. கொய்யால ! 10 arrear  clear பண்ற effort தேவைப்பட்டுச்சு.

சங்கத்துல போயி ஐக்கியம் ஆனேன்.  "மச்சி ! இந்த lecturer-அ கலாய்கிறோம்" - அப்டின்னு திரும்பவும் ஒரு குரல் !

Only உறுப்பினர்  to சங்கம் : "நான் Bombay -க்கு போயி operation பண்ணிக்கிட்டு மாதர் சங்கத்துல சேர்ந்தா கூட சேருவனே தவிர உங்க சங்கத்துல சேர மாட்டேன் டா".

இப்போ , read the title !