Monday, April 21, 2008

என் கல்லூரி விழாவில் கவிப்பேரரசு வைரமுத்து


கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் நான் படித்த கல்லூரி தமிழ் மன்ற விழாவின் சிறப்பு விருந்தினராக வந்திருந்தார். முதல் முறை இது போன்று ஒரு பேச்சை கவனிக்கப் போறோம்-ங்கிற feeling கூட இல்லை. சும்மா நானும் இருக்கேன் பேர்விழி-நு உட்கார்ந்து கிட்டு இருந்தேன்.அவர் பேச ஆரம்பிச்ச கொஞ்சம் நேரத்துல எல்லாம் ஒரு magnet மாதிரி இழுக்க ஆரம்பிச்சது அவரோட பேச்சு.

அவர் அப்போ பேசினதுல இருந்து சில snippets:

ஓரு situation அல்லது ஒரு குறிப்புக்கு ஏத்த வகையில் ஒரெ வரியில கவிதை சொல்லணும்.

விலை மாது: இங்கு மட்டுமே இவள் தனிமையில்.
அரசியல்வாதி : கை தட்டி விடாதீர்கள்.எழுந்து பேச ஆரம்பித்து விடுவான்.
நடிகை : திறந்து பார்த்து விடாதீர்கள். மேக்கப் இல்லாமல் அசிங்கமாய் இருப்பாள்.
குடிகாரன் : தண்ணீரில் மிதந்தவன் தரையில் இன்று.

தமிழை தேசிய மொழியாக ஆக்க வேண்டும் என்று அண்ணா அவர்கள் டில்லி சென்று இரு ந்தாராம். அப்போது அங்கே இருந்த பத்திரிக்கை நிருபர்கள் சிலர், அண்ணாவை கேட்டனராம் "ஐயா இது ஒரு ஜனநாயக நாடு. இங்கே எந்த ஒரு செயலும் எண்ணிக்கையின் அடிப்படையில் தான் அமைய வேண்டும். அப்படி பார்க்கும் போது, இங்கே தமிழ் பேசும் மக்களை விட ஹிந்தி பேசும் மக்கள் தான் அதிகம். அப்படி இருக்கும் பொழுது நீங்கள் எவ்வாறு தமிழை தேசிய மொழியாய் அறிவிக்க நினைக்கிறீர்கள்?" என்று.

அதற்கு பேரறிஞர் அண்ணா சொன்னாராம் " நீங்கள் சொல்வது சரிதான். ஒப்புக் கொள்கிறேன். அப்படிப் பார்த்தால் இந்தியாவில் மயில்களின் எண்ணிக்கையை விட காகங்களின் எண்ணிக்கை தான் அதிகம். அதை அடிப்படையாய்க் கொண்டு காகத்தை தேசியப் பறவையாய் அறிவிக்க முடியுமா?" என்று.

திகைத்துப் போய் நின்றனராம் பத்திரிக்கையாளர்கள்.

ஒரு முறை சர்தார் வல்லபாய் பட்டேல் வெளிநாடு சென்று இருந்த போது ஒரு பத்திரிக்கையாளர் கேட்டாராம் "What is your culture" என்று.
அதற்கு அவர் பதில் அளித்தாராம் "Our culture is agriculture" என்று.
ஒரு நாட்டின் கலாசாரம் அதன் தொழில் உடன் ஒன்று பட்டிருக்கும் அழகைத் தான் அவர் அவ்வாறாக கூறியுள்ளார்.

மாவீரன் நெப்போலியன் தன் கடைசி காலத்தில் தன்னுடைய தளபதியை அழைத்து " நான் மரணம் அடைந்தால் என் சவப்பெட்டியை மூடும் பொழுது என் இரு கைகளையும் வெளியே வைத்து சவப்பெட்டியை மூடுங்கள். அப்படியாவது இந்த உலகம் அறியட்டும் .. உலகையே ஆட்சி செய்த நெப்போலியன் கூட இந்த பூமியை விட்டுச் செல்லும் பொழுது ஒன்றையும் அவன் கையில் எடுத்துச் செல்லவில்லை" என்று.

வைரமுத்து அவர்களிடம் ஒரு முறை ஒரு கிராமத்தை சேர்ந்த ஒரு இளைஞன் அவனது கவிதைத் தொகுப்புகளைக் கொண்டு வந்தானாம். வைரமுத்து அவர்கள், அதை ஏனோ தானோ என்று அதை ஒரு ஈடுபாடு இல்லாமல் புரட்டிப் பார்த்துக் கொண்டு இருந்தாராம். திடீரென்று அவர் கண்ணில, அதில் எழுதி இருந்த ஒரு கவிதை கண்ணில் பட்டதாம் "மகாத்மா சொன்னது சரிதான். கிராமப் புறங்கள் இந்தியாவின் முதுகு எலும்புகள் தான்.. அதனால் தான் யாரும் அதைத் திரும்பிக் கூடப் பார்ப்பதில்லை" என்ற ஒரு கவிதை. உடனே தன் உதவியாளர்களை அழைத்து அந்த இளைஞனின் கவிதைகளைப் ப்ரிண்ட் செய்வதற்கு தேவையானவற்றை செய்யுமாறு கேட்டுக் கொண்டாராம்.

இன்னும் நிறைய பேசினார். ஆனா அத்தனையும் ஞாபகம் இல்லை :).
அவர் பேசிக்கொண்டு இருக்கும் போது "ஐயய்யோ .. இப்போ முடிச்சிடுவாரோ...இப்போ முடிச்சிடுவாரோ..." நு ஒரு feeling இருந்து கிட்டே இருந்துச்சு. அவர் பேசும் பொழுது pin drop silence என்கிற அளவுக்கு நிசப்தம்.. அவ்வளவு வசீகரம் அந்த பேச்சுல..

நூறு புத்தகங்களை படிக்கிறதும் ஒன்னு தான். இந்த மாதிரி கற்று அறிந்த அறிஞர்களின் பேச்சைக் கேக்குறதும் ஒன்னு தான்.
வாழ்க கவிப்பேரரசு!

2 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete