Monday, June 4, 2012

3 Gurus!

ஒரு குரு தன்னோட மரண படுக்கையில்  இருக்கிறார். அவருடைய கடைசி நிமிடங்களில் அவருடைய சீடர்கள் கேட்கின்றனர்
"குருவே, உங்களுடைய குரு யாரென்று அறிந்து கொள்ளலாமா ? "  என்று. 

குரு சொல்கிறார் - 
எனக்கு மொத்தம் 3 குருக்கள் - 
1 ஒரு திருடன் 
2 ஒரு நாய் 
3 ஒரு 3 வயது குழந்தை 

1 .திருடன் - (எனக்கு இந்த part ஞாபகம் இல்ல.  அதனால, fast forward பண்ணிடுவோம் )

2 . நாய் : 
ஒரு நாள், எதேச்சையாய் ஒரு காட்டில் அமர்ந்து கொண்டு இருந்த பொழுது, அங்கே ஒரு நாய் வந்தது. அதற்கு மிகுந்த தண்ணீர் தாகம் ஏற்பட்டு இருந்தது.  தண்ணீர் தேடி அலைந்த நாய்க்கு அதிர்ஷ்ட வசமாக ஒரு குட்டை தென்பட்டது. அங்கே ஓடிய நாய்க்கு தண்ணீரை எட்டி பார்த்த பொழுது தன் உருவம் தென்பட்டது. அது தன் உருவம் என்று அறியாத நாய், ஒரு பலமான எதிரி நாய் அந்த குட்டையில் இருப்பதாக எண்ணி, பின் வாங்கி ஓடியது. நேரம் ஆக ஆக, அந்த நாய்க்கு தண்ணீர் தாகம் அதிகரித்தது. ஒரு வேளை, அந்த எதிரி நாய் வேறு எங்கும் சென்று இருக்கக் கூடும் என்று எண்ணி மீண்டும் சென்று எட்டி பார்த்தது. ஆனால், அந்த நாய்(பிம்பம்) அங்கேயே இருந்தது. மீண்டும் மீண்டும் சென்று, பார்த்து, பயந்து பின் வாங்கி ஓடி வந்த நாய்க்கு இப்பொழுது தண்ணீர் தாகம் உச்சத்தை எட்டியது. துளி தண்ணீர் இல்லையென்றால் உயிர் மாண்டு விடும் அளவிற்கு தாகம் முற்றியது. சற்றும் எதிர்பாராமல் , தன் சக்தி அனைத்தையும் திரட்டி , என்ன நடந்தாலும் நடக்கட்டும் என்று ஓடி வந்து ஒரே பாய்ச்சலாக குட்டையில் குதித்தது. தான் வந்து பாய்ந்த வேகத்தில் எதிரி நாய் பயந்து ஓடி விட்டதாகவும் எண்ணி பெரும் திருப்தி அடைந்து தனக்கு தேவையான நீரையும் ஆனந்தமாக பருகியது. 

அப்பொழுது தான் உணர்ந்தேன் - நாமும் இப்படி தான் என்று. நாம் செய்ய நினைக்கும் பல வேளைகளில் தேவை இல்லாத பயங்கள், கற்பனைகள் எல்லாம் செய்து கொண்டு அந்த பிம்பத்தை கண்ட நாய் போல் பின் வாங்குகிறோம்.நம் பலத்தை நாம் எப்பொழுதும் உணருவது இல்லை.அந்த நாய்க்கு ஏற்பட்டது போல் அந்த தாகத்தை நாம் உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்றும் செய்ய நினைக்கும் காரியத்தை மிகுந்த தைரியத்துடனும் முழு ஆத்மார்த்தமான சக்தியுடனும் செயல் படுத்த  வேண்டும் என்றும் அந்த நாயிடம் இருந்து கற்று கொண்டேன். 

A related video about fear:

3 . ஒரு 3 வயது குழந்தை   

ஒரு முறை இரவில் ஒரு வீட்டில் அமர்ந்து எழுதி கொண்டு இருந்தேன். பலமாக காற்று அடித்ததில் விளக்கு அணைந்து போயிற்று. அப்பொழுது அந்த வீட்டில் இருந்த பெரியவர்கள், ஒரு மூன்று வயது பெண் குழந்தையிடம் ஒரு சின்ன தீ பெட்டியை கொடுத்து அனுப்பினார்கள். அதை கொண்டு வந்த குழந்தை , அந்த தீ குச்சியை உரசியதில், அந்த குச்சியின் முனையில் தீ பற்றியது. சரி, இந்த தருணத்தை பயன் படுத்தி இந்த குழந்தைக்கு தீ பெட்டி மற்றும் கந்தகம் ஆகியவற்றை பற்றி நாம் அறிந்ததை சிறந்த முறையில்  கற்று குடுப்போம் என்று எண்ணி அந்த குழந்தையிடம் கேட்டேன் 
"இந்த வெளிச்சம் எங்க இருந்து வந்துச்சுன்னு சொல்லு பார்ப்போம்?" என்றேன். 

அதற்கு அந்த குழந்தை சற்றும் எதிர் பாரா வண்ணம் அந்த தீ குச்சியை ஊதி அணைத்து விட்டு "இப்போ அந்த வெளிச்சம் எங்கே போச்சுன்னு நீங்க சொல்லுங்க. அப்புறம் எங்க இருந்து வந்துச்சுன்னு அத வச்சி நான் சொல்றேன் " - என்று தன் பிஞ்சு மொழியில் சொன்னது. சற்று நேரம் வியந்து போனேன். வாழ்க்கையில் நாம் எவ்வளவு கற்றாலும் நாம் கற்க வேண்டியவை ஏராளம் ஏராளம் என்றும் எந்த தருணத்திலும் நாம் அறிந்தவை மட்டுமே உலகம் என்றும் இருந்து விடக்கூடாது என்றும்   அந்த பிஞ்சு குழந்தை தன் மழலை மொழிகளில் பாடம் கற்பித்து விட்டு, அதை எனக்கு கற்பித்த கர்வமோ , பெருமிதமோ இன்றி விளையாட சென்று விட்டது. மேலும் "இவன் என் சீடன், இவன் என்னிடம் பயின்றான்" என்பது போன்ற பெருமைகளிலும் எனக்கு எந்த வித பங்கும் இன்றி செல்லுதலே உயர்ந்த தன்மை என்றும் உணர்தேன்.

சுபம் ! முற்றும்! The end! 

1 comment: