வித்தகக்கவிஞர் பா.விஜய் அவர்களால் எழுதப்பட்ட புத்தகம் தான் "கண்ணாடிக் கல்வெட்டுகள். சின்ன சின்ன ஊர்களில் இருக்கும் சரித்திரத்தால் சந்திக்க முடியாத இடங்களை தேடி தேடிச் சென்று ஒளியூட்டி இருக்கிறார்.
ஒவ்வொன்றும் நன்கு ரசிக்கும் படி அமைக்க பெற்றுள்ளது.
அந்த புத்தகத்தின் முன்னரையில் இருந்து சில வரிகள்.
ஒவ்வொரு ஊருக்கும் ஒரு கதை உண்டு. ஒவ்வொரு மண்ணுக்கும் ஒரு பாதிப்பு உண்டு! அவை அந்த பகுதி மக்களுக்கு மட்டுமே தெரிந்த ஒன்றாக இருக்கின்றது. தலைமுறை தலைமுறையாய் அந்த சம்பவங்கள் வயதானவர்களால் வாலிபர்களுக்கு சொல்லப்பட்டு காலம் காலமாய் பயணம் ஆகும்.
அப்படி ஊர் ஊராய் அறிந்தவர் அறியாதவர் என அனைவரிடமும் விசாரித்து கேட்ட போது அவர்களில் சிலர் சொன்ன சம்பவங்கள் சரித்திரங்களை விட பிரமிப்பாய் இருந்தன.
இதை நம்பினால் நிஜம்! நம்பாவிட்டால் கதை..
மொத்தம் ஏழு சம்பவங்கள்.
1.காவல் மரம் - பொள்ளச்சிக்கு அருகில் நடந்த சம்பவம்
2.கவிஞனின் ஜனனம் - மயிலாடுதுறைக்கு அருகில் நடந்த சம்பவம்
3.கண்ணகி வந்த ஊர் - மதுரைக்கு அருகில் நடந்த சம்பவம்
4.ஒரு தேவதை கல்லானாள் - எட்டையபுரத்திற்கு அருகில் நடந்த சம்பவம்
5.யாருமில்லாத கோட்டை - மன்னார்குடிக்கு அருகில் நடந்த சம்பவம்
6.கருப்பன் - கோவில்பட்டிக்கு அருகில் நடந்த சம்பவம்
7.சிறைக்குள் சிறுத்தை - பாளையங்கோட்டைக்கு அருகில் நடந்த சம்பவம்
ஒவ்வொரு நாளும் மேலே கூறப்பட்டுள்ள 7 சம்பவங்களின் சுருக்கம் மற்றும் அதனிடையே சொல்லப்பட்டு இருக்கும் நல்ல கருத்துகளையும் தொகுக்கிறேன்.
No comments:
Post a Comment