Tuesday, September 2, 2008

கண்ணாடிக் கல்வெட்டுகள்- காவல் மரம்



கதைச்சுருக்கம்:

18-ம் நூற்றாண்டில் நடைபெற்ற சம்பவம்.

ஆனைமலைப் பகுதி - பொள்ளாச்சிக்கு அருகே மலை சார்ந்த இடம்.


அந்த நகரத்தின் பெயர் - கொன்காணம்.
கொன்காண மன்னன் - நன்னன்.

அவன் உயிருனும் மேலாய் வணங்குவது - ஆழியாற்றங்கரையோரம் இருந்த காவல் மரம். அதற்கென்று காவலாளிகள் எல்லாம் வைத்து சர்வ மரியாதையுடன் அதை வணங்கி வந்தான். மக்களும் அவ்வாறே வணங்கி வந்தனர்.

ஊரில் மிகப்பெரிய வாணிபர், மாமூலனார். அவரின் மகள் நங்கை.

அவள் ஒரு நாள் ஆற்றில் குளித்து விட்டு வருகையில், யதார்த்தமாய் காவல் மரத்தில் இருந்து வந்து விழுந்த பழம் என்று அறியாமல் பழத்தை சுவைத்து விட்டாள். அதை காவலாளிகள் மன்னனிடம் கூற, நங்கைக்கு மரண தண்டனை விதிக்கிறான் மன்னன். நங்கையின் தலை துண்டிக்கப்படுகிறது.மன்னனின் தவறான தீர்ப்பை எதிர்த்தும் நங்கைக்கு இழைக்கப்பட்ட அ நீதிக்காகவும், மக்கள் கொதித்து எழுகின்றனர். புரட்சி வெடித்து மன்னன் மகுடம் இழக்கிறான்.

தற்சமயம் அந்த சரித்திர தடத்தின் சரித்திரம் :

இப்போது அது கேரளம். அந்த பகுதியின் பெயர் "பிங்கொனாம் பாறா".

பிங்கொனாம் பாறா என்றால் பெண்ணைக் கொலை செய்த பாறை என்று பொருள்.

மாங்கனி தின்று தண்டனைக்கு உள்ளானதால்," மாங்கனியம்மன்" என்றாகி, பின் காலப்போக்கில் "மாசாணியம்மன்" என்று மக்களுக்குள் தோன்றி விட்டாள்.
இவ்வாறு முடிகிறது அந்த சரித்திர நிகழ்வின் விவரிப்பு.

இதற்கிடையில், இந்த கதைக்காக கதையுடன் சேர்த்து கவிதையும் புனையப்பட்டு உள்ளது.

அந்த காலத்தை வர்ணிக்கும் பொழுது,

"தமிழகத்தின் வயல்களில் நெல்லுக்கு
பதிலாய் முத்து விளைந்த காலம்

இமயம், தமிழகத்திற்கு
இடுப்பளவு இருந்த இறுமாப்பான காலம்"

என்று கூறுகிறார்.

ஆனைமலைப் பகுதியை விவரிக்கையில்,

"அருவிக் கூ ந்தல் அவிழ்த்துப் போட்டு சிக்கெடுக்கும் சிகரங்கள்
பச்சை சட்டை தைத்து போட்டு படுத்து கிடக்கும் புல் நிலம்."

என்று கூறுகிறார்.


தாயில்லாத நங்கை இயற்கையின் அரவணைப்பில் வளர்கிறாள்.
இதை வர்ணிக்க,

"இயற்கையாகவே சில உறவுகள் அமைவதுண்டு. இயற்கையே உறவாகவும் அமைவது உண்டு.
தாயில்லாத இந்தத் தட்டாம் பூச்சிச் சிறகுக்கு காற்றும் மரமும் நிலவுமே அம்மா!"

என்று கூறுகிறார்.

நங்கை சிறையில் அடைக்கப் பெறும் போது,

"குற்றவாளிகளைக் குறைப்பதற்காக சில நேரங்களில் சிறைச்சாலைகள் உருவாக்கப்படுகின்றன!
சிறைச்சாலைகளை நிரப்புவதற்காக சில சமயங்களில் குற்றவாளிகள் உருவாக்கப்படுவார்கள் !"
என்று கூறுகிறார்.

நங்கைக்கு மரண தண்டனை விதிக்கப்படுகையில், "பூப்பறித்த காற்றுக்கா சிரச்சேதம் ? மடல் விரித்த மல்லிகைக்கா மரண தன்டணை?
மடல் விரித்த மல்லிகைக்கா மரண தண்டனை?"

என்றும் கூறுகிறார்.

3 comments:

  1. Hi Vivek. Im a big fan of you blog.
    Guess you have just started with it.. All the three posts are too good. Can read it over and over. Keep up the good work.. Expecting your to post more often.. Thanks buddy.

    ReplyDelete
  2. Keep up the good work dude.. Really enjoyed reading it :)

    ReplyDelete