Friday, October 9, 2015

யாரை நானும் குத்தம் சொல்ல ?

2014 தீபாவளியின் பொழுது,  தி.நகரில் இருக்கும் எங்கள் அலுவலகத்திற்கு வெளியில் இருந்து ஒரு அழைப்பு. காக்கி pant, கலர் சட்டை மற்றும் பூட்ஸ் அணிந்து ஓருவர் நின்று இருந்தார். 45 வயது மதிப்பு உடையவர். வழக்கமாக இல்லாத பாணியில் ஒரு வணக்கம் வைத்தார்.

அவர்: "ராப்பகலா காவல் காக்குறோம். தீபாவளி வருது. அது தான், சும்மா உங்கள பார்த்து சும்மா...." (இளிக்கிறார்)

நான் : எங்க பாஸ் UK போயி இருக்கார். வேணும்னா, வந்த உடனே சொல்றேன்.

சென்று விட்டார்.

மீண்டும் சில நாள்கள் கழித்து, அதே வணக்கம், அதே தோரணை, அதே வசனம். நானும் அதே பதிலைக் கொடுத்தேன்.

இது சில நாள்கள் தொடர்ந்தது. ஒரு லேசான மன உளைச்சலை தந்தது.

ஒரு நாள், அவர் மீது மது வாடை , காலை 10 மணி

(கோபமான மிரட்டும் தொனியில்)
அவர்:  உங்க பாஸ் இல்லனா  என்ன?? நீங்க இருக்கீங்க இல்ல ? ஒரு கவுரவமா நடத்தத் தெரியலையா உங்களுக்கு எல்லாம் ??ஒரு 500-ஓ , ஆயிரமோ கொடுத்தா  சந்தோசமா வாங்கிட்டு போக போறோம். இப்படியா அலைகழிப்பீங்க????

என்று கூறி "பார்த்துக்கிறேன்" என்பது போல வீறு நடை போட்டு சென்றார்.

எது வேண்டுமானாலும் நடக்கட்டும். சல்லி காசு கூட தரக்கூடாது என்பதில் உறுதியாய் இருந்தேன்.


மீண்டும்  அதே போலீஸ் காரர்  2015 ஜூலை மாதம் வந்தார்.

அவர்: "ராப்பகலா உங்களுக்காகத் தான்  காவல் காக்குறோம். சும்மா உங்கள பார்த்து எல்லாம் நல்லா  இருக்கீங்களானு...." (இளிக்கிறார்)

நான் : எங்க பாஸ் UK போயி 2 நாள் தான் ஆகுது.

அவர்: "நீங்களே ஏதாவது  செய்யல்லாம் இல்லியா??" (இளிக்கிறார்)

நான் : இல்லீங்க சார், நான் இங்க work  பண்றேன். அவ்ளோ தான். அவரை கேட்டுட்டு வேணும்னா சொல்றேன்.

அவர்:  சரி. எது ஒன்னும் பார்த்து செய்ங்க!

என்று சொல்லி நடக்க ஆரம்பித்தார்.


எதுவும் செய்ய முடியவில்லையே என்ற ஏக்கம் கூடிற்று. அப்பொழுது,


நான் : சார், நீங்க எந்த station 

அவர்:  பாண்டி பஜார் 

நான் : உங்க பேரு 

அவர்:  ராஜா.

நான் : சரிங்க சார், நான் எங்க பாஸ் கிட்ட பேசிட்டு சொல்றேன் 


மெதுவாக நடந்து சென்றார்.


ஆபீஸ் உள்ளே நடந்து சென்ற பொழுது தான், பாண்டி பஜார் காவல் நிலைய S.I .- அவர்களுடைய அலைபேசி எண் என்னிடம் இருப்பதை உணர்ந்தேன்.

அவரை அலைபேசியில் அழைத்தேன்.

நான் : சார், உங்க ஸ்டேஷன்-ல ராஜா-நு யாராவது இருக்காங்களா ?

SI : அப்படி யாரும் இல்லியே !

நான் : இல்ல. இங்க ஒருத்தர் வந்து காசு கேட்டார்.அதுக்காகதான்.

SI : அந்த ஆள் கிட்ட phone கொடுங்க.

நான் : ஒரு நிமிஷம் சார்.

office -க்கு வெளியில் ஓடி சென்று பார்த்தேன். ஒரு சந்தில் நடந்து சென்று கொண்டு இருந்தார்.

உரக்கக் கத்தி அழைத்தேன் "சார்...." என்று.

என்னைக் கண்டவுடன் மகிழ்ச்சியில் ஓடி வந்தார்.(பணம் தருவேன் என்று)

அவர் அருகில் வந்ததும்,

நான் : SI சார் லைன்-ல இருக்கார். பேசுங்க. 
என்று சொல்லி என் phone-ஐ கொடுத்தேன்.

அவர் : யாரு.......????

நான் : SI 

அவரின் கைகள் நடுங்குவதை நன்றாகப் பார்த்தேன்.

வாங்கி பேசினார்.

(phone-இல் SI- இடம் பேசினார்)
அவர் : அய்யா, நான் traffic போலீஸ்-ங்க அய்யா, suspend-ங்க அய்யா. retired-ங்க அய்யா. 

என்று சொல்லி என்னிடம் phone-ஐ நீட்டி 

அவர் : வச்சிட்டார். கட் பண்ணிடு 

நான் காதில் வைத்து கேட்டேன்.

SI line-இலே தான் இருந்தார்.

SI : சார் , phone-அ அந்த ஆள் கிட்ட குடுங்க.

மீண்டும் குடுத்தேன்.

அவர் : அய்யா , சும்மா பேசி கிட்டு தான் அய்யா இருந்தேன். எதுவும் கேக்கலீங்க அய்யா. இந்த பக்கமே இனி வர மாட்டேங்க அய்யா. சரிங்க அய்யா.சரிங்க அய்யா. சரிங்க அய்யா.

என்னிடம் நீட்டி "கட் பண்ணு" என்பது போல் மிரட்டினார்.

நான் கண்டு கொள்ளவில்லை.

SI line-இலே தான் இருந்தார்.

நான் : சார். சொல்லுங்க.

SI : சார், அந்த ஆள் போலீசே இல்ல. fraud. உங்களால முடியும்னா ரெண்டு அடி போடுங்க. இல்லனா, ஸ்டேஷன்-ல கொண்டு வந்து விடுங்க. நான் பார்த்துக்கிறேன். For  sure, அந்த ஆள் இனி உங்க கிட்ட வர மாட்டான்.

நான் : Thank you சார்.


கட் செய்த உடன் எதிரில் நின்ற போலி போலிசை பார்த்தேன்.

லேசாக பயத்தில் கலங்கிய கண்கள்.

("அவர்", இனி "அவன்" ஆகும்)

அவன்  :  இப்போ நான் என்ன கேட்டேன்-நு நீ phone பண்ண???. உடனே phone பண்ணிடுவியா?? எல்லாம் ஒரு மிதப்புல தான் அலையுறீங்க.

நான் பதில் எதுவும் பேசவில்லை.

லேசான புன்முறுவலுடன் காக்கி சாயம் வெளுத்ததை எண்ணி சிரித்து சில நேரம் அவரின் முகத்தைப் பார்த்து விட்டு உள்ளே சென்றேன். 

திரும்பி பார்த்தேன். வெகு வேகமாக நடையை கட்டி கொண்டு இருந்தார்.


இன்று வரை, எந்த தொந்தரவும் இல்லை. இனியும் இருக்காது என்று நம்புகிறேன்.


மார்டின் லூதர் கிங் உடைய  ஒரே ஒரு வாசகம் தான் நினைவுக்கு வந்தது.

"The ultimate tragedy is not the oppression and cruelty by the bad people but the silence over that by the good people."


இந்த பதிவு, ஒரு ஆதங்கத்தின் வெளிப்பாடே அன்றி வேறு எந்த நோக்கமும் கொண்டது  இல்லை.

3 comments:

 1. Archana NithyananthamOctober 9, 2015 at 1:50 PM

  Well done Vivek... A good write up... Silence by the good people is the killer

  ReplyDelete
 2. Ithu than gourava pitchai.. Your 2nd brave attempt related to Police :) Indru muthal nee "Thani Oruvan - Vivek" yendru azhaika paduvai..

  ReplyDelete
 3. Many try to avoid the first step which is the biggest struggle against anything..So good to know a person who crosses that hurdle and being an example...

  ReplyDelete